Latest Updates
-
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம்
ஒரு வருடத்திற்கு பின் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசிக்கப் போகுது..
Mercury Transit In Virgo On 01 October 2023: வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் ஒரு ராசியில் 27 நாட்கள் வரை இருப்பார். மேலும் அவ்வப்போது வக்ர நிலையிலும் பயணிப்பார். ராசிகளில் புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். புதன் புத்திசாலித்தனம், வியாபாரம், பேச்சு, படிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
இந்த புதன் தற்போது சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2023 அக்டோபர் 01 ஆம் தேதி புதன் தனது சொந்த ராசியான கன்னி ராசிக்கு செல்கிறார். இந்த கன்னி ராசியில் அக்டோபர் 19 ஆம் தேதி வரை இருந்து, பின் துலாம் ராசிக்கு செல்கிறார்.

புதன் சொந்த ராசிக்கு 1 வருடம் கழித்து செல்வதால், அதன் தாக்கம் சற்று சிறப்பானதாக இருக்கும். இப்போது கன்னி செல்லும் புதனால் மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 6 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சற்று கலவையான பலன்களைப் பெறுவார்கள். ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். வங்கியில் கடன் வாங்க நினைத்தால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். பயணங்களால் சில நல்ல பலன்கள் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களின் பணிகள் பாராட்டைப் பெறும். மாணவர்கள் வெளியூர் சென்று படிக்க விரும்பினால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 5 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு புதனின் அருளால் சிறப்பான வெற்றிகள் கிடைக்கும். இக்காலத்தில் உங்களின் அனைத்து திட்டங்களும் பயனுள்ளதாக இருக்கும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல வெற்றியைக் காண்பார்கள். காதல் திருமணம் செய்து கொள்ள நினைத்தாலும் கிரகப் பெயர்ச்சி சாதகமாக இருக்கும். வணிகர்கள் இக்காலத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். அரசு தொடர்பான வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும்.
மிதுனம்
மிதுன ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிதாக தொழிலைத் தொடங்க நினைத்தால், அதற்கு இக்காலம் சாகமாக இருக்கும்.
கடகம்
கடக ராசியின் 3 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். அதேப் போல் நிறைய தொண்டுகளிலும் நாட்டம் அதிகரிக்கும். அரசியலில் இருப்பவர்கள் தேர்தலில் நிற்க முடிவெடுத்தால், சாதகமான பலன்கள் கிடைக்கும். வெளிநாடு செல்ல இக்காலத்தில் முயற்சிகளை மேற்கொண்டால், நல்ல வெற்றி கிடைக்கும். வியாபாரிகளுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வலுவடையும். சிக்கிய பணம் திரும்ப கிடைக்கும். பேச்சால் பல கடினமான சூழ்நிலைகளையும் எளிதில் சமாளிப்பீர்கள். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. உங்களின் திட்டங்களை ரகசியமாக வைத்து செயல்பட்டால் தான் வெற்றி கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 1ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதத்தின் தொடக்கம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். உயர் அதிகாரிகளுடனான உறவு வலுபெறும். சமுகத்தில் அந்தஸ்தும் கௌரவமும் உயரும். மாணவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். அரசு வேலைக்கு முயற்சித்தால், நல்ல வேலை கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 12 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நிறைய அலைச்சலையும், செலவுகளையும் சந்திப்பார்கள். வெளியூர் பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். யாருக்கும் அதிகமாக கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். சண்டை, சச்சரவுகளில் இருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறது. வேலைகளில் மிகவும் பிஸியாக இருப்பீர்கள். இதனால் உங்களுக்காக நேரத்தை செலவிடுவது கடினமாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சமூகத்தில் புதிய நபர்களுடன் தொடர்பு கிடைக்கும். இந்த நட்பு எதிர்காலத்தில் நன்மையைத் தருவதாக இருக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மாணவர்கள் வெளிநாடு சென்று படிக்க விரும்பினால், அதற்கான வாய்ப்புகள் இக்காலத்தில் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வேலையை மாற்ற நினைத்தால் அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். வியாபாரத்தை விரிவுப்படுத்தும் நோக்கம் இருந்தால், அது வெற்றி பெறும். மேலும் இக்காலத்தில் பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். நிலம், சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் தீரும். வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
மகரம்
மகர ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் புதன் சகல நன்மைகளை வழங்குவார். வணிகர்களுக்கு இக்காலத்தில் புதிய ஒப்பந்தம் தேடி வந்தால், அதை கைவிட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. மேலும் ஒரு புதிய வேலையை தொடங்க நினைத்தால், அதை செய்ய இக்காலம் ஏற்றதாக இருக்கும். ஆன்மிகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். தொண்டுகளில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் வெற்றி பெறும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கும்பம்
கும்ப ராசியின் 8 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக வயிற்று பிரச்சனைகள் மற்றும் சருமம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். உங்களை வீழ்த்த பலரும் காத்துக் கொண்டிருப்பார்கள். உங்களின் திட்டங்களை ரகசியமாக வைத்து செயல்பட அறிவுறுத்தப்படுகிறது.
மீனம்
மீன ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் செல்வாக்கு இக்காலத்தில் உயரும் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இக்காலத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல பலனைத் தரும். உங்களின் செயல்கள் பாராட்டைப் பெறும். திருமணத்தில் உள்ள தடைகள் நீங்கும். ஆனால் கூட்டு தொழில் செய்வதைத் தவிர்க்க வேண்டும். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications