Latest Updates
-
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்!
ரிஷபம் செல்லும் புதனால் மே 31 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது...
Mercury Transit In Taurus On 31 May 2024: வேத ஜோதிடத்தின் நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் பேச்சு, படிப்பு, புத்திசாலித்தனம், வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இந்த புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார்.
ஒருவரது ஜாதகத்தில் புதன் நல்ல நிலையில் இருந்தால், அந்நபர் படிப்பில், வியாபாரத்தில், பேச்சில், புத்திசாலித்தனத்தில் சிறந்து விளங்குவார். தற்போது புதன் மேஷ ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் புதன் வருகிற மே 31 ஆம் தேதி தனது நண்பனின் ராசியான ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளார்.

இந்த புதன் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கப் போகிறது. குறிப்பாக தொழில் ரீதியாக அருமையாக இருக்கப் போகிறது. இப்போது ரிஷபம் செல்லும் புதனால் தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காணப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத பணத்தைப் பெறுவார்கள். சிலர் புதிய வருமான ஆதாரங்களையும் உருவாக்கும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வசதிகள் பெருகும். வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் தேடி வரும். பேச்சாற்றல் சிறப்பாக இருக்கும். பேச்சால் பல காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
கும்பம்
கும்ப ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவார்கள். தொழில் தொடர்பான சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஆர்டர்களைப் பெறுவார்கள். புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்க வாய்ப்புக்கள் கிடைக்கும். தாயுடனான உறவு மேம்படும்.
மகரம்
மகர ராசியின் 5 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் குழந்தை தொடர்பான சில நல்ல செய்திகளைப் பெறுவார்கள். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாக இருக்கும். ஊடக துறையில் இருப்பவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக நிதி நிலை உயரும் வகையில் எதிர்பாராத பணத்தைப் பெறக்கூடும். தொழிலதிபர்கள் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications