Latest Updates
-
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்!
ரிஷபம் செல்லும் புதன்: மே 31 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்...
Mercury Transit In Taurus On 31 May 2024: வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் பேச்சு, புத்திசாலித்தனம், படிப்பு, பங்குச் சந்தை, பொருளாதாரம், வணிகம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். எனவே புதன் ஒவ்வொரு முறை ராசியை மாற்றும் போதும், அதன் தாக்கம் வாழ்வின் இந்த அம்சங்களில் எல்லாம் தெரியும்.
தற்போது புதன் மீன ராசியில் பயணித்து வருகிறார். இவர் மே 10 ஆம் தேதி மேஷ ராசிக்குள் நுழைகிறார். அதைத் தொடர்ந்து இந்த மாதத்தின் இறுதியில், அதாவது மே 31 ஆம் தேதி சுக்கிரனின் ராசியான ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியானது அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது.

குறிப்பாக தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும், பண வரவும் இருக்கும். இப்போது ரிஷபம் செல்லும் புதனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். எடுக்கும் முடிவுகள் அனைத்தும் சரியாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் பிற சலுகைகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள், இப்பெயர்ச்சியால் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
மிதுனம்
மிதுன ராசியின் 12 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நிறைய பணத்தை சேமிப்பார்கள். அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். இதனால் அனைத்து வேலைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வியாபாரிகளின் கையில் பணம் அதிகம் புரளும். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். வேலை தொடர்பான பயணங்களை அதிகம் மேற்கொள்ள நேரிடும்.
கடகம்
கடக ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படும். நிதி ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் கிடைக்கும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல ஆதாயம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். தைரியமும், வலிமையும் அதிகரிக்கும். பேச்சால் பல வேலைகளை சிறப்பாக முடிப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
