Latest Updates
-
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க..
புதன் பெயர்ச்சியால் ஜூன் 7 முதல் அடுத்த 16 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..
Mercury Transit In Taurus 2023: நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர். இவர் கல்வி, பேச்சு, வியாபாரம், புத்திசாலித்தனம் ஆகியவற்றின் காரணியாகவும் கருதப்படுகிறார்.
மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியான புதன் 2023 ஜூன் 07 ஆம் தேதி சுக்கிரனின் ராசியான ரிஷப ராசிக்குள் நுழைகிறார். இந்த ரிஷப ராசியில் புதன் 2023 ஜூன் 24 ஆம் தேதி வரை இருப்பார். அதன் பின் மிதுன ராசிக்குள் நுழைவார்.

குறுகிய நாட்களில் புதன் ராசியை மாற்றினாலும், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதுவும் ரிஷபம் செல்லும் புதனால் சில ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதையும், எந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்கக்கூடும் என்பதையும் காண்போம். உங்கள் ராசியும் அதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம்
மேஷ ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலம் மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்காது. இந்த காலகட்டத்தில் குடும்பத்தில் சில கருத்து வேறுபாடுகளை சந்திக்க நேரிடும். உங்கள் பேச்சால் குடும்ப உறுப்பினர்களுடன் சண்டைகள் வர வாய்ப்புள்ளது.
மேலும் பண பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். திருமணமானவர்கள், தங்கள் திருமண வாழ்வில் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் உங்கள் பேச்சு வாழ்க்கைத் துணையுடன் பெரிய சண்டையைக் கொண்டு வரும்.
துலாம்
துலாம் ராசியின் 8 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் சில பிரச்சனைகளை கொண்டு வர வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு சற்று குறைவாகவே இருக்கும். பணம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது.
பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சற்று கவனமாக நடந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இக்காலத்தில் பேசும் போது உங்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகளை வளரவிடாதீர்கள்.
தனுசு
தனுசு ராசியின் 6 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் பணிபுரிபவர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்காது. அலுவலகத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்களால் அடைய முடியாத இலக்குகளை உங்கள் உயர்அதிகாரிகள் உங்களுக்கு வழங்குவார். இதனாலேயே அவதூறுகளை சந்திக்க நேரிடும்.
வாழ்க்கைத் துணையுடனான உறவில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வியாபாரிகளுக்கு இக்காலம் சிறப்பாக இருக்காது. நிதியைப் பொறுத்தவரை, செலவுகள் அதிகரிக்கும். இதன் காரணமாக உங்களின் சேமிப்பும் குறையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications