Latest Updates
-
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
ரிஷபம் செல்லும் புதனால் ஜூன் 07 முதல் இந்த ராசிக்காரர்களின் செல்வம் பெருகப் போகுது...
Mercury Transit In Taurus 2023: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றம் மனித வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நவகிரகங்களில் புதன் புத்திசாலித்தனம், பேச்சு, வணிகம், பொருளாதாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். மேலும் இந்த புதன் நவகிரகங்களில் மிகவும் வேகமாக நகரக்கூடியவர்.
புதன் ராசியை மாற்றும் போதெல்லாம், அவரது பேச்சு, வணிகம், பொருளாதாரத்தில் ஒருவித தாக்கம் இருக்கும். கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் தற்போது மேஷ ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2023 ஜூன் 07 ஆம் தேதி புதன் சுக்கிரன் ஆளும் ரிஷப ராசிக்குள் நுழைகிறார்.

சுக்கிரனும், புதனும் நட்பு கிரகங்கள். ரிஷப ராசிக்கு நுழையும் புதனின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இருப்பினும் இந்த ராசி மாற்றத்தால் சில ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தையும், நிதி நிலையில் முன்னேற்றத்தையும் காணப் போகிறார்கள். இப்போது ரிஷபம் செல்லும் புதனால் எந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் கன்னி ராசிக்காரர்கள் தங்கள் ஆளுமையில் சில மாற்றங்களைக் காண்பார்கள். அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகள் நல்ல வெற்றியுடன் லாபத்தையும் பெறுவார்கள். நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருந்த வேலை வெற்றிகரமாக முடிக்கப்படும். பணிபுரிபவர்களுக்கு நல்ல சம்பள உயர்வு கிடைக்கலாம். வணிகர்களுக்கு இக்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும் நல்ல ஒப்பந்தம் கிடைக்கக்கூடும்.
மகரம்
மகர ராசியின் 5 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். எந்த ஒரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். நிதி ரீதியாக இக்காலம் மிகவும் மங்களகரமானதாக இருக்கும். பழைய முதலீடுகளால் இக்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குழந்தைகளால் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். காதல் மற்றும் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
மீனம்
மீன ராசியின் 3 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் வாகனம் மற்றும் சொத்து வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். இக்காலகட்டத்தில் தாயின் முழு ஆதரவு கிடைக்கும். உங்களின் தைரியமும் வீரமும் அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையை மாற்ற நினைத்தால், இக்காலத்தில் விரும்பிய வேலை வாய்ப்புக்கள் தேடி வரும். ஆனால் ஆரோக்கிய விஷயத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் உங்களுக்கு ஏழரை சனி நடக்கிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
