Latest Updates
-
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க
ரிஷபம் செல்லும் புதனால் இன்று முதல் ஜூன் 24 வரை இந்த ராசிகளுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்கப்போகுது...
Mercury Transit In Taurus 2023: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றம் மனித வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு இடைவெளியில் ராசியை மாற்றும்.
அந்த வகையில் புத்திசாலித்தனம், கல்வி, வியாபாரம், பேச்சு ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் புதன் ஜூன் 07 ஆம் தேதி சுக்கிரனின் ராசியான ரிஷப ராசிக்குள் நுழைகிறார்.

புதன் ரிஷப ராசியில் நுழைவதால், அதன் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்கள் நற்பலன்களைப் பெற்றாலும், சிலருக்கு மோசமாக இருக்கலாம். ரிஷப ராசிக்கு செல்லும் புதன், அந்த ராசியில் ஜூன் 24 ஆம் தேதி வரை இருந்து, பின் மிதுன ராசிக்கு செல்கிறார்.
இப்போது ரிஷப ராசிக்கு செல்லும் புதனால் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம். உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம்
மேஷ ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் மேஷ ராசிக்காரர்கள் பல இனிமையான பலன்களைப் பெறுவார்கள். பேச்சால் கடினமான சூழ்நிலைகளையும் எளிதில் சமாளிப்பீர்கள். நிதி நிலை வலுவாக இருக்கும். கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். ஆனால் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதுவும் சரும பிரச்சனைகள் மற்றும் செரிமான கோளாறுகளால் அவதிப்படக்கூடும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் மனவலிமை அதிகரிக்கும். சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும். தேர்தலில் நிற்க முடிவெடுத்தால், உங்களுக்கு சாதகமாக முடிவுகள் வரும். குழந்தை தொடர்பான கவலைகள் நீங்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. காதல் திருமணம் செய்ய விரும்பினால், அதற்கு இக்காலத்தில் நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 12 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும். பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க விரும்பினால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். நீதிமன்ற வழக்குகளை பேசி தீர்த்துக் கொள்ளவும். இக்காலத்தில் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். இல்லாவிட்டால் நிதி இழப்பை சந்திக்க நேரிடும்.
கடகம்
கடக ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் புதிய வேலையைத் தொடங்கினால், சாதகமான பலன்கள் கிடைக்கும். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் இக்காலத்தில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். இக்காலத்தில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கவும் வாய்ப்புள்ளது.
சிம்மம்
சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படக்கூடும். பெற்றோரின் ஆரோக்கியத்தில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் இருந்தால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும். அரசு தொடர்பான வேலைகளில் நல்ல வெற்றி கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் அனைத்து வகையிலும் இக்காலம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். அதிக தொண்டுகளை செய்வீர்கள். அதிகரிக்கும் மனவலிமையால் கடினமான சூழ்நிலைகளையும் எளிதில் சமாளிப்பீர்கள். இக்காலத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் மற்றும் பணிகள் நல்ல பாராட்டைப் பெறும். வெளிநாடு செல்ல முயற்சித்தால், நல்ல வெற்றி கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 8 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலம் அவ்வளவு சிறப்பாக இருக்காது. பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சதியால் பலியாக வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எந்த வேலையையும் கவனமாக செய்ய அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் நிதி நிலை வலுவாக இருக்கும். சிக்கிய பணம் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களின் திட்டங்களை ரகசியமாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் உங்களின் முக்கிய வேலைகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டாலும், இறுதியில் வெற்றி காண்பீர்கள். திருமண வாழ்வில் இனிமை அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். காதல் திருமணத்திற்கான வாய்ப்புக்களும் உள்ளன. வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆனால் கூட்டு தொழில் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
தனுசு
தனுசு ராசியின் 6 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் எதிரிகள் சற்று அதிகரிப்பார்கள். உங்களை வீழ்த்த பல முயற்சிகளை மேற்கொள்வார்கள். நீதிமன்ற வழக்குகளை பேசி தீர்க்க முயற்சிக்க வேண்டும். செரிமான பிரச்சனைகளில் கவனமாக இருக்க வேண்டும். இக்காலத்தில் மேற்கொள்ளும் பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். வெளிநாடு செல்ல எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
மகரம்
மகர ராசியின் 5 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இக்காலம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். மாணவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். அனைத்து காரியங்களிலும் நல்ல வெற்றி கிடைக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். புதிய வேலைகளைத் தொடங்கினால், அதில் நல்ல வெற்றி கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். வாகனம் வாங்கும் எண்ணம் இருந்தால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து நற்செய்திகளைப் பெறுவீர்கள். வேலையை மாற்ற விரும்பினால், அதற்கு இக்காலத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் இக்காலத்தில் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
மீனம்
மீன ராசியின் 3 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் நடத்தையில் மென்மை இருக்கும். பேச்சுத் திறமையால் எப்பேற்பட்ட கடினமான சூழ்நிலைகளையும் சமாளிப்பீர்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருக்கும் நபர்களுடன் தொடர்பு கிடைக்கும். நிறைய தொண்டுகளை செய்வீர்கள். உங்களின் நற்பெயர் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications