Latest Updates
-
கொங்கணி ஸ்டைல் காராமணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குடிமகன் ஒவ்வொருவரும் 9 கோடி சம்பாதிக்கும் உலகின் பணக்கார நாடு எது தெரியுமா? அமெரிக்கா இல்லை -
செப்டம்பர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்வில் பிரகாசத்தை கொண்டு வரப்போகுது! -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கை இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழப்போகுதாம் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா?
விருச்சிக ராசியில் இருக்கும் புதன்: நவம்பர் 26 வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்...
Mercury Transit In Scorpio On November 2023: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றிக் கொண்டிருக்கும். அப்படி கிரகங்கள் ராசியை மாற்றும் போது, அதன் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன்.
இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். புதனின் நிலையில் மாற்றங்கள் ஏற்படும் போது அதன் தாக்கம் வாழ்க்கையில் இந்த அம்சங்களில் நிச்சயம் காணப்படும். புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார்.

இந்த புதன் 2023 நவம்பர் 06 ஆம் தேதி துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்குள் நுழைந்தார். விருச்சிக ராசியில் நுழைந்த புதன், அந்த ராசியில் நவம்பர் 26 ஆம் தேதி வரை இருந்து பின் தனுசு ராசிக்கு செல்லவுள்ளார்.
விருச்சிக ராசியில் புதன் இருக்கும் காலத்தில் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு மோசமாக இருக்கும். இப்போது எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 8 ஆவது வீட்டில் புதன் உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆரோக்கியம் சற்று மோசமாக இருக்கும். பழைய நோய் ஒன்று இக்காலத்தில் தொந்தரவு செய்யும். சளி, காய்ச்சலால் அவதிப்படக்கூடும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் வழக்கத்தை விட கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும். மேலும் புதிய முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
மிதுனம்
மிதுன ராசியின் 6 ஆவது வீட்டில் புதன் உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நவம்பர் 26 வரை சிறப்பாக இருக்காது. எதிரிகள் நிறைய தொந்தரவு செய்வார்கள். கடன் தொல்லை அதிகமாக இருக்கும்.
பணியிடத்தில் நிறைய வேலைப்பளுவை சந்திக்க நேரிடும். குடும்பத்தினருடன் போதுமான நேரத்தை செலவிட முடியாமல் போகும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், அதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
மீனம்
மீன ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நவம்பர் 26 வரை எந்த வெற்றியும் கிடைக்காது. செய்யும் வேலைகளில் பல தடைகளை சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யாதீர்கள். முக்கியமாக முதலீடுகளை செய்யாதீர்கள். உங்கள் மீது வீண் பழி சுமத்தப்படலாம். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. சிலருக்கு பண இழப்புக்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications