Latest Updates
-
ரக்ஷா பந்தன் அன்று உங்க அண்ணன் ராசிக்கேற்ற நிறத்தில் ராக்கி கட்டுங்க.. நல்ல அதிர்ஷ்டத்தை தரும்.. -
கொள்ளு தோசையும், பூண்டு தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு பணமும், புகழும் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களை செல்வந்தராக்கப் போகுது.! உங்க ராசி என்ன? -
பாபா வங்காவின் கணிப்பு படி செப்டம்பர் மாதத்தில் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பச்சை சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஒருடைம் இந்த க்ரீமி பாலக் பன்னீர் கிரேவி செய்யுங்க.. டேஸ்ட் அல்ட்டிமேட்டா இருக்கும்... -
பிளாஸ்டிக் நாற்காலிகளின் நடுவில் ஏன் ஒரு துளை உள்ளது தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், 1 கப் மைதா மாவும் இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
பூர நட்சத்திரத்திற்குள் நுழையும் சூரியனால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா?
விருச்சிகம் செல்லும் புதன்: நவம்பர் 6 முதல் இந்த ராசிகளுக்கு தொழிலில் முன்னேற்றமும், லாபமும் கிடைக்க போகுது..
Mercury Transit In Scorpio On November 2023: ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுகின்றன. அப்படி ராசியை மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன்.
இந்த புதன் புத்திசாலித்தனம், படிப்பு, பேச்சு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். கிரகங்களில் புதன் குறுகிய காலத்தில் தனது நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவர். புதனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போது அதன் தாக்கம் ஒருவரது தொழிலிலும், பேச்சிலும், படிப்பிலும், யோசிக்கும் திறனிலும் காணப்படும்.

அந்த வகையில் புதன் நவம்பர் 06 ஆம் தேதி துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு செல்கிறார். விருச்சிக ராசிக்கு செல்லும் புதனின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக இந்த பெயர்ச்சியால் 3 ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும், நல்ல லாபத்தையும் பெறவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத விதத்தில் பணத்தைப் பெறக்கூடும். வருமானத்தில் உயர்வு ஏற்பட்டு, நிதி நிலை வலுவடையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் இந்த பெயர்ச்சிக்கு பின் கிடைக்கும். முக்கியமாக நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
மகரம்
மகர ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படக்கூடும். சிலர் புதிய வருமான ஆதாரங்களைப் பெறலாம். வியாபாரம் செய்பவர்களின் பணம் எங்காவது சிக்கியிருந்தால், அது இக்காலத்தில் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பங்குச் சந்தை, லாட்டரியில் பணத்தை முதலீடு செய்தால், அதில் நல்ல லாபத்தைப் பெற வாய்ப்புள்ளது.
மீனம்
மீன ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். அதிர்ஷ்ட வீட்டிற்கு புதன் செல்வதால், இப்பெயர்ச்சிக்கு பின் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். தொழிலில் நல்ல முன்னேற்றத்துடன், லாபத்தையும் பெற வாய்ப்புள்ளது. இக்காலத்தில் சிலர் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம். வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்திலும் நல்ல பலன்களைப் பெறுவார்கள். குடும்பத்தினரின் முழு ஆதரவு இக்காலத்தில் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications