Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
புதன் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 20 நாட்கள் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது...
Mercury Transit In Scorpio On November 2023: நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் கிரகங்களிலேயே மிகவும் வேகமாக ராசியை மாற்றக்கூடியவர். அதோடு புதன் புத்திசாலித்தனம், பேச்சு, வியாபாரம், படிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இந்த புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார்.
புதன் இதுவரை துலாம் ராசியில் பயணித்து வந்தார். இந்நிலையில் நவம்பர் 06 ஆம் தேதி செவ்வாய் ஆளும் விருச்சிக ராசிக்குள் புதன் நுழைந்துள்ளார். இந்த விருச்சிக ராசியில் புதன் சுமார் 20 நாட்கள் வரை பயணித்து, அதன் பின் தனுசு ராசிக்குள் நுழையவுள்ளார்.

புதனின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படும் போது, அதன் தாக்கம் ஒருவரது தொழில், பேச்சு, படிப்பு ஆகியவற்றில் நன்கு காணப்படும். அதுவும் புதன் விருச்சிக ராசிக்கு சென்றிருப்பதால் அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இப்போது விருச்சிகம் சென்றுள்ள புதனால் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 8 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் பல்வேறு வழிகளில் இருந்து நல்ல பண ஆதாயம் கிடைக்கும். ஆனால் பேசும் போது சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் உங்கள் பேச்சு தனிப்பட்ட வாழ்க்கையில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பேசும் போது, கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், உங்கள் பேச்சால் பணியிடத்தில் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். முக்கியமாக இக்காலத்தில் தொழிலில் எந்த ஒரு முதலீடுகளை செய்வதையும் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திக்க நேரிடும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். வேலையில் வெற்றி பெற கூடுதல் முயற்சிகளை எடுக்க வேண்டும். இப்படி கடினமாக உழைத்தால் பணியிடத்தில் உங்களின் நிலை உயரும். உங்களின் மரியாதை அதிகரிக்கும். திருமணமான தம்பதிகளின் வாழ்க்கை நன்றாக இருக்கும். காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு திருமணம் நடக்க வாய்ப்புள்ளது.
மிதுனம்
மிதுன ராசியின் 6 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் தங்கள் போட்டியாளர்களால் வேலையில் தடைகளை சந்திப்பார்கள். தொழில் வாழ்க்கை நிலையானதாக இருக்கும். ஆயினும் வேலையில் விரும்பிய முடிவுகளை பெற முடியாமல் போகும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, பதற்றம் நிறைந்ததாக இருக்கும். வாழ்க்கைத் துணை அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இதன் விளைவாக வீட்டின் சூழல் அமைதியிழந்து இருக்கும்.
கடகம்
கடக ராசியின் 5 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் காதல் வாழ்க்கை, தொழில் வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இக்காலத்தில் தொழிலில் முன்னேற்றத்தைக் காண முடியாது. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். சிலருக்கு வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கை நன்றாக இருக்கும். ஆனால் வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
சிம்மம்
சிம்ம ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் தொழில் ரீதியாக இந்த ராசிக்காரர்கள் நல்ல வெற்றியைக் காண்பார்கள். இருப்பினும் பேசும் வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறக்கூடும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உங்களின் நிலை அலுலகலத்தில் மேம்படும். வாழ்க்கைத் துணையுடன் போதுமான நேரத்தை செலவிடும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 3 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் உடன்பிறந்தவர்களுடன் பிரச்சனைகளை சந்திக்கலாம். பணியிடத்தில் தைரியமாகவும், அச்சமின்றியும் இருப்பீர்கள். பணிபுரிபவர்கள் புதிய வேலை வாய்ப்புக்களைப் பெறலாம், கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காணக்கூடும். இக்காலத்தில் உங்களின் பிரச்சனைகளானது நீங்கள் மனம்விட்டு பேசினால் தீரும்.
துலாம்
துலாம் ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தனிப்பட்ட வாழ்க்கை இனிமையாக இருக்கும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடனான உறவு சிறப்பாக இருக்கும். ஆனால் யாரையும் இக்காலத்தில் கேலி செய்யாதீர்கள். இல்லாவிட்டால், அது உங்கள் மீதான நற்பெயரை கெடுத்துவிடும். உங்களின் கடமைகள் அனைத்தையும் நிறைவேற்ற முடியும். உங்களின் எதிரிகள் மற்றும் சவால்களை புத்திசாலித்தனமாக சமாளித்து வெற்றி பெறுவீர்கள். தொழில் ரீதியாக இக்காலத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் முதல் வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். உங்களின் நடத்தை உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவுகளை மேம்படுத்தும். உங்கள் தைரியமான அணுகுமுறை உங்கள் எதிரிகள்/போட்டியாளரை எளிதில் வீழ்த்த உதவும். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். மேலதிகாரிகளிடம் நற்பெயரைப் பெறுவீர்கள். ஆரோக்கியமான உணவுகளை உண்பதன் மூலம் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 12 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக நல்ல பலன்களைப் பெறுவார்கள். சிலர் வெளிநாடு செல்லலாம். எம்.என்.சி அல்லது வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு இக்காலத் மிகவும் நன்றாக இருக்கும். உங்களின் விடாமுயற்சியால் நன்கு சம்பாதிப்பீர்கள்.
மகரம்
மகர ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் தொழில் ரீதியாக நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். உங்களின் கடமைகள் அனைத்தையும் நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத் துணையின் மீது அன்பை வெளிப்படுத்தினால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் புத்திசாலித்தனத்தால் உங்கள் எதிரிகளை சமாளிப்பீர்கள். ஆனால் தனிப்பட்ட உறவுகளில் கவனம் செலுத்தமாட்டீர்கள். நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
கும்பம்
கும்ப ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் தொழில் ரீதியாக நல்ல பலன்களைப் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவுகள் வலுபெறும். நற்பெயர், புகழ் போன்றவை இக்காலத்தில் கிடைக்கும். ஆனால் பேசும் போது சற்று பணிவுடன் பேசவும். உங்கள் வாழ்க்கைத் துணை உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள். இது உங்கள் உறவில் சந்தோஷத்தையும், நம்பிக்கையையும் தரும்.
மீனம்
மீன ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசியைச் சேர்ந்த மாணவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றமும், லாபமும் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு இக்காலத்தில் கிடைக்கும் என்பதால், அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கை இணக்கமாகவும், நட்பாகவும் இருக்கும். வாழ்க்கைத் துணை மற்றும் குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவும் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications