Latest Updates
-
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் சொந்த ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து கன்னியில் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்! -
கீ போர்டுகளில் எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் மாறி மாறி உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கும்பகோணம் கல்யாண வீட்டு கடப்பா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு முன்னேற்றதிக்கான கதவு திறக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 02-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது!
புதன் பெயர்ச்சியால் நவம்பர் 27 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படப்போகுது..
Mercury Transit In Sagittarius On 27 November 2023: நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். ஜோதிடத்தில் இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். மேலும் இந்த புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார்.
தற்போது புதன் விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் புதன் நவம்பர் 27 ஆம் தேதி குரு பகவானின் தனுசு ராசிக்குள் நுழைவுள்ளார். தனுசு ராசியில் புதன் நுழைவது மங்களகரமானதாக கருதப்படுகிறது.

மேலும் இந்த புதன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். முக்கியமாக தொழிலில் நல்ல முன்னேற்றமும், வியாபாரிகளுக்கு நிறைய லாபமும் கிடைக்கும். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் மற்றும் இக்காலத்தில் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். முக்கியமாக குடும்பத்தினருடன் போதுமான நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். மேலும் இக்காலத்தில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் 5 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் குழந்தைகளால் நல்ல செய்திகளைப் பெறுவார்கள். போட்டித் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெற வாய்ப்புள்ளது. காதலித்து வந்தால், அதில் வெற்றி பெறலாம். வேலை செய்பவர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படக்கூடும். சிலர் எதிர்பாராத பணத்தை இக்காலத்தில் பெறலாம். வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். முதலீடுகளை செய்தால், அதிலும் நல்ல லாபம் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் வாழ்க்கையில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சிறப்பாக செயல்படுவார்கள் மற்றும் நல்ல பாராட்டுக்களையும் பெறுவார்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல ஆதாயம் இக்காலத்தில் கிடைக்கும். ஆளுமையில் முன்னேற்றம் ஏற்படும். பேச்சால் பல காரியங்களை சாதிப்பீர்கள். கூட்டு வேலையில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications