Latest Updates
-
நீர் தோசையும், தண்ணி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 25 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கவலைகளும், தோல்வியும் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் 25-ல் சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேது-சூரிய சேர்க்கையால் அடுத்த 24 நாட்கள் இந்த 3 ராசிக்கு வாழ்க்கை நரகமா இருக்கும்.. -
மணத்தக்காளி கீரை கடையல் ரெசிபி - கீரையை இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இதுல உங்களுக்கு பிடிச்ச பழம் என்னன்னு சொல்லுங்க.. உங்களோட பலம் என்னன்னு சொல்றோம்.. -
ஒரு மணி நேரம் ஏன் 60 நிமிடங்களாக பிரிக்கப்பட்டுள்ளது? 100 நிமிடமாக என் பிரிக்கப்படவில்லை தெரியுமா? -
யாரும் பேசாத குடும்ப நல்வாழ்வு போக்கு: நிதித் தயார்நிலை -
September Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. செப்டம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
செப்டம்பர் மாதத்தில் பல கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 துரதிர்ஷ்டமான ராசிகள் என்னென்ன தெரியுமா?
தனுசு செல்லும் புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொழில் வாழ்க்கை பிரகாசமா இருக்கப்போகுது..
Mercury Transit In Sagittarius On 07 January 2024: ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், வியாபாரம், பேச்சு, படிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். புதனின் இயக்கத்தில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் வாழ்வின் இந்த அம்சங்களில் காணப்படும்.
இந்த புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். தற்போது புதன் விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஜனவரி 07 ஆம் தேதி புதன் குரு பகவானின் ராசியான தனுசு ராசிக்குள் நுழைகிறார்.

தனுசு ராசியில் புதன் நுழைவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் புதனின் அருளால் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியையும், லாபத்தையும், முன்னேற்றத்தையும் காணவுள்ளார்கள். இப்போது தொழில் ரீதியாக அதிர்ஷ்டம் பெறும் அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். பணம் தொடர்பான விஷயங்களில் நல்ல வெற்றி கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தைரியம் இருமடங்கு அதிகரிக்கும். சிலர் வெளிநாடு செல்லும் வாய்ப்புக்களைப் பெறலாம்.
கும்பம்
கும்ப ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படப் போகிறது. சிலர் புதிய வருமான ஆதாரங்களைப் பெற வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் உங்களின் ஒவ்வொரு செயலிலும் நல்ல வெற்றியும், முன்னேற்றம் ஏற்படும். வணிகர்கள் நல்ல நிதி நன்மைகளைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 5 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் குழந்தைகளால் நல்ல செய்திகளைப் பெறுவார்கள். உங்களின் காதல் வெற்றி அடையும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்களின் சிறப்பான செயல்திறனால் நல்ல பாராட்டுக்களைப் பெறுவார்கள். ஆடம்பரத்திற்காக நிறைய செலவுகளை செய்வீர்கள். நிதி ரீதியாக மிகவும் அற்புதமாக இருக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications