Latest Updates
-
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் சொந்த ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து கன்னியில் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்! -
கீ போர்டுகளில் எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் மாறி மாறி உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கும்பகோணம் கல்யாண வீட்டு கடப்பா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு முன்னேற்றதிக்கான கதவு திறக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 02-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
செப்டம்பர் 1-ல் சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் திடீர் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
தனுசு செல்லும் புதன்: ஜனவரி 07 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுது...
Mercury Transit In Sagittarius On 07 January 2024: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் பேச்சு, வணிகம், புத்திசாலித்தனம், பொருளாதாரம், படிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார்.
இந்த புதன் குறுகிய நாட்களில் ராசியை மாற்றினாலும், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். தற்போது புதன் விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஜனவரி 07 ஆம் தேதி புதன் தனுசு ராசிக்குள் நுழைகிறார்.

தனுசு ராசிக்குள் புதன் நுழைவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியால் மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது. குறிப்பாக தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதோடு, நிறைய லாபமும் கிடைக்கப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் திருமணமான இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆயினும, உங்கள் வாழ்க்கைத் துணையின் உணர்வுகளைப் புறக்கணிக்காதீர்கள் என்று அறிவுறுத்தப்படுகிறது. திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கலாம். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள். சிலர் புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்களைப் பெறலாம்.
தனுசு
தனுசு ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். உங்களின் வேலைகளை திட்டமிட்டபடியே முடிப்பீர்கள். பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உங்கள் வாழ்க்கைத் துணை முன்னேறலாம். கூட்டு தொழில் செய்ய நினைத்தால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். முக்கியமாக வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இதனால் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். சிலர் ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழலாம். மருத்துவம், ரியல் எஸ்டேட், ஹோட்டல் தொடர்பான வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications