Latest Updates
-
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
புதன் பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசியும் இதுல இருக்கா?
Mercury Transit In Pisces On 07 March 2024: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றம் ஒவ்வொரு ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுகின்றன. அதில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன், புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார்.
இந்த புதன் 2024 மார்ச் 07 ஆம் தேதி குரு பகவானின் ராசியான மீன ராசிக்குள் நுழைகிறார். மீன ராசிக்குள் புதன் நுழைவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்கள் இந்த புதன் பெயர்ச்சியால் பல சிரமங்களை சந்திப்பார்கள். அதுவும் தொழில் மற்றும் வியாபாரத்தில் நஷ்டத்தை சந்திக்கும் வாய்ப்புள்ளது. இப்போது புதன் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நிதி இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. மேலும் உங்கள் மீது தேவையில்லாத பழி சுமத்தப்படலாம். இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாவீர்கள். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் தவறான புரிதல் காரணமாக கருத்து வேறுபாடுகள் ஏற்படும். தேவையில்லாத செலவுகள் அதிகரிக்கலாம். இதனால் நிதி பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும் ஏழரை சனி நடந்து கொண்டிருக்கிறது. எனவே இன்னும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
சிம்மம்
சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். இதுவரை மறைந்து தொந்தரவு செய்து கொண்டிருந்த நோய் தீவிரமாகலாம். எனவே ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் எந்த ஒரு புதிய வேலையையும் இக்காலத்தில் தொடங்காதீர்கள். அதேப் போல் அதிகம் கோபப்படுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், பெரிய சிக்கலில் சிக்கி அவதிப்பட நேரிடும்.
துலாம்
துலாம் ராசியின் 6 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நீதிமன்ற வழக்குகளில் தோல்வியை சந்திக்க நேரிடும். வியாபாரிகள் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் அவதிப்படுவார்கள். ரகசிய எதிரிகள் அதிகமாக தொல்லை தருவார்கள். விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications