Latest Updates
-
செப்டம்பரில் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
Krishna Janmashtami 2026: கிருஷ்ண ஜெயந்தி எப்போது வருகிறது? வீட்டில் எப்படி பூஜை செய்யணும் தெரியுமா? -
ராகி மாவும், பச்சை பயறும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி கொழுக்கட்டை செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியன்-புதன்-கேது நட்சத்திரம் ஒரே நட்சத்திரத்தில் இணைவதால் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
பரங்கிக்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்கறி செஞ்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அருமையா இருக்கும் -
ஒரு லிட்டர் பெட்ரோல் விற்றால் பெட்ரோல் பங்க்-க்கு எவ்வளவு ரூபாய் லாபம் கிடைக்கும் தெரியுமா? -
ரக்ஷா பந்தன் அன்று உங்க அண்ணன் ராசிக்கேற்ற நிறத்தில் ராக்கி கட்டுங்க.. நல்ல அதிர்ஷ்டத்தை தரும்.. -
கொள்ளு தோசையும், பூண்டு தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு பணமும், புகழும் தேடிவரும் நாளாக இருக்குமாம்
புதன் பெயர்ச்சியால் இன்னும் 12 நாட்களில் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசிக்கப் போகுது...
Mercury Transit In Libra On October 2023: ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இயக்கங்கள் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதில் நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், படிப்பு, வியாபாரம், பேச்சு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
புதனின் இயக்கத்தில் சிறு மாற்றங்கள் ஏற்பட்டாலும், அதன் தாக்கம் வாழ்வின் இந்த அம்சங்களில் காணப்படும். அந்த வகையில் அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் புதன் தனது சொந்த ராசியான கன்னி ராசிக்குள் நுழைந்தார். அதைத் தொடர்ந்து அக்டோபர் 19 ஆம் தேதி சுக்கிரன் ஆளும் துலாம் ராசிக்கு செல்கிறார்.

புதன் துலாம் ராசிக்கு செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களின் நிதி நிலையில் முன்னேற்றமும், வியாபாரத்தில் நல்ல லாபமும் கிடைக்கவுள்ளது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
தனுசு
தனுசு ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் அக்டோபர் 19 முதல் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. புதிய வருமான ஆதாரங்களில் இருந்து நிறைய பணத்தை சம்பாதிக்க முடியும்.
தொழில் ரீதியாக, இக்காலத்தில் வேலை இல்லாதவர்களுககு நல்ல வேலை வாய்ப்பு தேடி வரும். பணிபுரிபவர்களுக்கும் புதிய சலுகைகள் கிடைக்கும். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் முதலீடு செய்தால், நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
மிதுனம்
மிதுன ராசியின் 5 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் காதலிப்பவர்கள் இக்காலத்தில் தங்கள் காதலை வீட்டில் தெரிவித்தால், அடுத்த கட்டத்திற்கு செல்லலாம். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். அலுவலகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். குழந்தைகளால் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். முக்கியமாக சொத்து, புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
மேஷம்
மேஷ ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் விருப்பங்கள் அக்டோபர் 19 முதல் நிறைவேறும். மேலும் பணியிடத்தில் நல்ல முன்னேற்றத்துடன் நிதி நன்மைகளையும் பெறக்கூடும்.
கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாக இருக்கும். மேலும் இக்காலத்தில் உங்களின் வாழ்க்கைத் துணையும் முன்னேற்றத்தைக் காண்பார். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வர வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications