1 வருடம் கழித்து துலாம் ராசியில் பயணிக்கும் புதன்: நவம்பர் 5 வரை இந்த 5 ராசிக்கு சூப்பரா இருக்கும்..

Mercury Transit In Libra On October 2023: நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன் மற்றும் இவர் குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர். இந்த புதன் புத்திசாலித்தனம், படிப்பு, வியாபாரம், பேச்சு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். மேலும் இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார்.

புதன் ஒவ்வொரு முறையை ராசியை மாற்றும் போதும், அதன் தாக்கம் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் காணப்படும். அந்த வகையில் புதன் அக்டோபர் 19 ஆம் தேதி துலாம் ராசிக்குள் நுழைந்தார். சுக்கிரனின் துலாம் ராசிக்குள் 1 வருடம் கழித்து நுழைந்த புதனின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

Mercury Transit In Libra On October 2023: Effects On 12 Zodiac Signs In Tamil

அதுவும் இந்த ராசியில் புதன் நவம்பர் 05 ஆம் தேதி வரை இருந்து, பின் செவ்வாயின் விருச்சிக ராசிக்குள் நுழையவுள்ளார். இப்போது துலாம் ராசியில் பயணிக்கும் புதனால் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் தடைகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. வெற்றி பெற வேண்டுமானால், திட்டமிட்டு வேலை செய்ய வேண்டும். திடீரென்று வேலையில் தீவிரமாக ஈடுபடுவீர்கள. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நல்லுறவைப் பேணுவதில் சிரமத்தை சந்திக்க நேரிடும்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 6 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். குடும்ப தேவைகளை நிறைவேற்றுவதற்கும், பணத்தை சம்பாதிப்பதற்குமே பெரும்பாலான நேரத்தை செலவிடுவீர்கள். உங்களின் செயல்திறன் அலுவலகத்தில் பாராட்டப்படும். முதலீடுகள் நல்ல பலனைத் தரும். சிலர் சமூகத்தில் உயர் நிலையில் உள்ளவர்களை சந்திப்பதோடு, அவர்களால் நற்பலன்களைப் பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசியின் 5 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கும். வியாபாரம் செய்பவர்கள் புதனின் அருளால் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடும். தொழிலில் வளர்ச்சி ஏற்படும். வெற்றி மேல் வெற்றியைப் பெறுவீர்கள். வணிகர்கள் முதலீடு செய்தால் நல்ல லாபத்தைப் பெறக்கூடும்.

கடகம்

கடக ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் புதிய சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். குடும்பத்தினருடன் நல்ல தரமான நேரத்தை செலவிடுவீர்கள். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கைக்கு கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். தொழிலதிபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசியின் 3 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் புதிய முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். வேலையில் நல்ல வெற்றி கிடைக்கும். பயணங்களால் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். வாழ்வில் பல நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள். நிறைய பணத்தை சேமிக்க முடியும். வெளிநாட்டில் இருந்து புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

கன்னி

கன்னி ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் இக்காலம் இந்த ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இக்காலத்தில் நிதி ஆதாயத்திற்கான பல வாய்ப்புகள் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மொத்தத்தில் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்கும்.

துலாம்

துலாம் ராசியின் முதல் வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் இநத ராசிக்காரர்களின் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் வெற்றிகள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். உங்களுக்கு எதிரான சூழ்நிலைகள் கூட உங்களுக்கு சாதகமாக மாறும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 12 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தில் நீண்ட தூர பயணத்தை மேற்கொள்ள நேரிடும். லட்சியங்களை நிறைவேற்றுவதில் வெற்றி கிடைக்கும். இக்காலத்தில் உங்களின் தலைமைப் பண்பும், திறமையும் மேம்படும். புதிதாக தொழிலைத் தொடங்க நினைத்தால், நல்ல லாபம் கிடைக்கும். ஆனால் ஆரோக்கியத்தில் முழு கவனத்தை செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் நிறைய மருத்துவ செலவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

தனுசு

தனுசு ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வணிகர்கள் பெரிய லாபத்தைப் பெறுவார்கள். சிக்கிய பணம் திரும்ப கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் சிறப்பான நிதி முன்னேற்றத்தைக் காண்பார்கள். வருமானம் அதிகரிப்பதோடு நிதி ஆதாயமும் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும்.

மகரம்

மகர ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு புதனின் அருளால் தொழிலில் நல்ல முன்னேற்றமும், லாபமும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு சிக்கிய பணம் கிடைக்கும். புதிய முதலீட்டு திட்டங்கள் நிறைவேறும். பரம்பரை சொத்துக்களால் நல்ல நன்மை கிடைக்கும். ஆரம்ப கால முதலீடுகள் நல்ல பலனைத் தரும். மொத்தத்தில் நவம்பர் 05 வரை நன்றாக இருக்கும்.

கும்பம்

கும்ப ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். முக்கியமாக வியாபாரத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் பேச்சு இனிமையாக மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். நிலம் தொடர்பான விஷயங்களில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்.

மீனம்

மீன ராசியின் 8 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் வியாபாரிகள் புதிய திட்டங்களால் நல்ல வெற்றியைக் காண்பார்கள். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். தம்பதிகளுக்கு இடையே அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். தந்தையின் ஆரோக்கியம் மோசமடைவதால் பணம் நிறைய செலவாகக்கூடும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Monday, October 23, 2023, 12:08 [IST]
Desktop Bottom Promotion