Latest Updates
-
பரங்கிக்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்கறி செஞ்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அருமையா இருக்கும் -
ஒரு லிட்டர் பெட்ரோல் விற்றால் பெட்ரோல் பங்க்-க்கு எவ்வளவு ரூபாய் லாபம் கிடைக்கும் தெரியுமா? -
ரக்ஷா பந்தன் அன்று உங்க அண்ணன் ராசிக்கேற்ற நிறத்தில் ராக்கி கட்டுங்க.. நல்ல அதிர்ஷ்டத்தை தரும்.. -
கொள்ளு தோசையும், பூண்டு தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு பணமும், புகழும் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களை செல்வந்தராக்கப் போகுது.! உங்க ராசி என்ன? -
பாபா வங்காவின் கணிப்பு படி செப்டம்பர் மாதத்தில் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பச்சை சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஒருடைம் இந்த க்ரீமி பாலக் பன்னீர் கிரேவி செய்யுங்க.. டேஸ்ட் அல்ட்டிமேட்டா இருக்கும்... -
பிளாஸ்டிக் நாற்காலிகளின் நடுவில் ஏன் ஒரு துளை உள்ளது தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
ஒரு வருடத்திற்கு பின் துலாம் செல்லும் புதன்: இந்த 3 ராசிகளுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படப்போகுது..
Mercury Transit In Libra on 19 October 2023: வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் பேச்சு, புத்திசாலித்தனம், படிப்பு, வணிகம், பங்குச்சந்தை போன்றவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
புதனின் நிலையில் சிறு மாற்றங்கள் ஏற்பட்டாலும், அது வாழ்க்கையின் இந்த அம்சங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் நவகிரகங்களிலேயே குறுகிய காலத்தில் ராசியை மாற்றக்கூடியவர் புதன்.

அந்த வகையில் புதன் அக்டோபர் 19ஆம் தேதி, அதாவது இன்று துலாம் ராசிக்குள் நுழைகிறார். ஒரு வருடத்திற்கு பின் துலாம் ராசிக்குள் நுழையும் புதனின் தாக்கமானது மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
குறிப்பாக இந்த புதன் பெயர்ச்சியால் 3 ராசிக்காரர்கள் தீபாவளிக்கு முன் தங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும், லாபத்தையும் பெறவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கும்பம்
கும்ப ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். தடைபட்ட வேலைகளில் நல்ல வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதே வேலையில் முக்கியமான வேலைகளில் நல்ல வெற்றியும் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள்.
கடகம்
கடக ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் புதிய வாகனத்தை வாங்கலாம். சிலர் புதிய சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்களைப் பெறுகூர்கள். இக்காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைப்பால், பண பற்றாக்குறை எதுவும் இருக்காது. ரியல் எஸ்டேட், பங்குச் சந்தையில் இருப்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறக்கூடும். பணிபுரிபவர்கள் தீபாவளிக்கு முன் நல்ல முன்னேற்றத்தையும், முக்கியமான வேலைகளில் வெற்றிகளையும் காண்பார்கள். தடைபட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
துலாம்
துலாம் ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். பேச்சின் தாக்கம் சிறப்பாக இருக்கும். உங்கள் பேச்சால் பல காரியங்களை சாதிப்பீர்கள். உங்களின் வசதிகள் அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்களைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும். நிறைய பணத்தை சம்பாதிப்பதோடு, சேமிக்கவும் முடியும். மொத்தத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் பல வெற்றிகளைக் குவிப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications