Latest Updates
-
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது?
புதன் பெயர்ச்சியால் அக்டோபர் 19 முதல் இந்த 3 ராசிக்காரங்க ரொம்பவும் கவனமா இருக்கணும்...
Mercury Transit In Libra On 19 October 2023: நவகிரகங்களில் புத்திகாரகனான புதன் குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர். மேலும் சூரிய மண்டலத்தில் புதன் சூரியனுக்கு மிகவும் அருகில் உள்ள கிரகம் ஆகும். இந்த புதன் பேச்சு, புத்திசாலித்தனம், வியாபாரம், படிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். புதன் நிலையில் மாற்றும் ஏற்படும் போது, வாழ்வின் இந்த அம்சங்களில் எல்லாம் அதன் தாக்கம் காணப்படும்.
அந்த வகையில் புதன் அக்டோபர் 01 ஆம் தேதி கன்னி ராசிக்குள் நுழைந்தார். கன்னி ராசியில் நுழைந்த 18 நாட்களிலேயே புதனின் நிலையில் மாற்றம் ஏற்படவுள்ளது. அதாவது, புதன் அக்டோபர் 19 ஆம் தேதி துலாம் ராசிக்கு செல்லவிருக்கிறார். இந்த துலாம் ராசியில் புதன் நவம்பர் 06 ஆம் தேதி வரை இருந்து, பின் விருச்சிக ராசிக்கு செல்வார்.

புதன் துலாம் ராசியில் நுழைவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த புதன் பெயர்ச்சியால் சற்று கவனமாக இருக்க வேண்டும். இப்போது எந்த ராசிக்காரர்கள் துலாம் செல்லும் புதனால் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் அக்டோபர் 19 முதல் இந்த ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். செலவுகள் அதிகமாகி மிகுந்த அலைச்சலை சந்திக்கக்கூடும். சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழலும் ஏற்படலாம். வியாபாரத்தைப் பொறுத்தவரை, இக்காலத்தில் போட்டியாளர்கள் சற்று அதிக ஆதிக்கம் செலுத்துவார்கள். இதனால் நீங்கள் இழப்புக்களை சந்திக்க வாய்ப்புள்ளது. ஆகவே சற்று உஷாராக இருக்க வேண்டும்.
பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் சிறு விஷயங்களுக்கும் வாங்குவாதத்தில் ஈடுபடலாம். இதனால் பணியிடம் சற்று பிரச்சனை நிறைந்ததாக இருக்கும். வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும். நிதி ரீதியாக, பணத்தை சம்பாதிக்க கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 6 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை கடுமையாக பாதிக்கப்படும். வங்கியில் கடன் வாங்க நினைத்தால், அதில் சிக்கலை சந்திக்கலாம். இக்காலத்தில் உங்களுக்கு அதிகமாக கோபம் வரக்கூடும்.
உங்களின் பேச்சு பல பிரச்சனைகளை கொண்டு வர வாய்ப்புள்ளதால், பேச்சைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. வியாபாரிகளுக்கு லாபம் சற்று குறையும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வை எதிர்பார்த்துக் கொண்டிருந்தால், அதை இக்காலத்தில் பெற முடியாது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, செரிமான பிரச்சனைகளால் அவதிப்படக்கூடும்.
கடகம்
கடக ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பல ஏமாற்றங்களை சந்திக்கலாம். இதன் விளைவாக மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும். வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் இன்னும் அதிகரிக்கும்.
வேலை தொடர்பாக நிறைய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். வியாபாரம் செய்பவர்கள், இக்காலத்தில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். முக்கியமாக இக்காலத்தில் பரிவர்த்தனைகளை செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications