Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம் -
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
ஜூலை 27-ல் வக்ரமடையும் சனி பகவான்: டிசம்பர் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
இந்த 4 குணங்கள் இருப்பவர்கள் அதிபுத்திசாலியாகவும், மேதைகளாகவும் இருப்பார்களாம் - சாணக்கிய தந்திரம் -
மணமணக்கும் பன்னீர் பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.! -
ஜூலை 20-ல் சூரியன் நட்சத்திரத்தை மாற்றுவதால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இந்த 5 காலை பழக்கங்கள் இதய நோயின் அபாயத்தை அதிகரிக்குமாம்.. உஷார்.. -
400 ஆண்டுக்கு முன் தோன்றி இப்போதும் செயல்பாட்டில் உள்ள உலகின் முதல் வங்கி எது? அதன் முதலாளி யார் தெரியுமா? -
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 02 முதல் இந்த 4 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது!
சிம்ம ராசிக்கு செல்லும் புதனால் இந்த 3 ராசிக்காரங்க வரப்போகும் 20 நாட்கள் பல ஆபத்துக்கு ஆளாகப்போறாங்களாம்!
புதன் பெயர்ச்சி என்பது ஜோதிடரீதியாக தற்போது மிகவும் பிரபலமான ஒரு கிரக மாற்றமாகும். ஜூலை 25 ஆம் தேதி புதன் சிம்ம ராசியில் பிரவேசித்தது. இதன் விளைவாக, நம் வாழ்வில் பல நேர்மறை மற்றும் எதிர்மறை மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், ஜூலை 25 முதல், சில ராசிக்காரர்கள் சிக்கலில் நுழைவார்கள். ஆகஸ்ட் 21 வரை உங்களுக்கு இந்த நேரம் உள்ளது.
இந்த காலத்தில் சில ராசிக்காரர்களுக்கு பல அசுபமான மாற்றங்கள் வரும் காலம் என்பதால், வாழ்க்கையில் பல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். புதன் ஆகஸ்ட் 21 வரை சிம்ம ராசியில் இருந்து பின் கன்னி ராசிக்கு மாறுவார்.

ஆனால் சிம்ம ராசியில் இருக்கும் போது புதன் சில ராசிக்காரர்களுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவார். இந்த புதன் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பாதகமான விளைவுகள் ஏற்படும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
புதன் சிம்ம ராசியில் சஞ்சரிப்பது மேஷ ராசிக்காரர்களுக்கு பல மாற்றங்களைக் கொண்டு வருகிறது. புதனின் இந்த பெயர்ச்சி காலக்கட்டத்தில் பண விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களின் குடும்பத்தில் நிதிப் பிரச்சனைகள் அதிகரிக்கலாம்.
அதுமட்டுமின்றி முதலீடுகளால் பணத்தை இழக்கும் வாய்ப்பும் உள்ளது. பல பணிகள் முடிவடையாமல் தாமதமாக வாய்ப்புள்ளது. பணம் தொடர்பாக செய்ய வேண்டிய விஷயங்களை சற்று கவனத்துடன் செய்ய வேண்டும்.
கடகம்
கடக ராசிக்காரர்களின் இரண்டாவது வீட்டில் புதன் பெயர்ச்சி அடைகிறார், இதனால் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கை முதல் பணவிஷயம் வரை அனைத்து விஷயத்திலும் நெருக்கடியை சந்திப்பீர்கள்.
மாணவர்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது. உங்கள் குடும்பத்தினர் பணத்தை தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே எல்லாவற்றையும் கையாள்வதில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இந்த 20 நாட்கள் மிகவும் சாதகமற்ற நேரம் என்பதால் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி மிகவும் மோசமான பலன்களைத் தருகிறது. சனிபகவான் புதனுடன் அசுப உறவைக் கொண்டுள்ளார். இந்த பெயர்ச்சி உங்களுக்கு சாதகமற்ற மாற்றங்களைக் கொண்டுவருகிறது.
இந்த காலக்கட்டத்தில் வாகனத்தைப் பயன்படுத்துவதில் மிகுந்த எச்சரிக்கை தேவை. சாலையில் நடந்து செல்லும்போது கூட கவனமாக இருக்க வேண்டும். உங்களின் இந்த மாத கடின உழைப்பு எதிர்காலத்தில் பலன் தரும், எனவே பொறுமையாக இருங்கள். சிம்ம ராசியில் புதனின் மாற்றம் இந்த மூன்று ராசிகளுக்கும் பாதகமான பலன்களைத் தரும்.
புதன் பெயர்ச்சி
புதன் புத்தியின் கிரகமாக கருதப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி உங்கள் ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால் அது உங்களுக்கு ஆரோக்கியத்தையும் செல்வத்தையும் நல்ல சிந்தனையையும் தருகிறது. ஒரு வலுவான புதன் உங்கள் வெற்றிகான வாய்ப்புகளைக் கொண்டுவருகிறது.
ஜாதகத்தில் புதனின் நிலை நன்றாக இருந்தால் அது உங்களுக்கு சாதகமாக பல மாற்றங்களைத் தரும். ஆனால் ராகு, கேது, செவ்வாய் ஆகிய கிரகங்கள் புதனுடன் தவறான வீட்டில் இருந்தால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும் என்று அர்த்தம். இதனால் சிலருக்கு உடல்நலக் கோளாறுகளும் ஏற்படலாம்.



Click it and Unblock the Notifications
