Latest Updates
-
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பூரி பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா?
ஒரு வருடத்திற்கு பின் சிம்மம் செல்லும் புதன்: ஜூலை 25 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் லாபம் கிடைக்கப்போகுது..
Mercury Transit In Leo On July 2023: ஜோதிடத்தில் கல்வி, வியாபாரம், புத்திசாலித்தனம், பேச்சு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் குறுகிய நாட்களில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்வார்.
அந்த வகையில் ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் கடக ராசிக்குள் நுழைந்த புதன், ஜூலை 25 ஆம் தேதி சூரியன் ஆளும் சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். சிம்ம ராசிக்குள் நுழைந்த புதன், ஆகஸ்ட் மாதத்தில் சிம்ம ராசியில் வக்ரமாகிறார்.

முக்கியமாக புதன் சிம்ம ராசிக்குள் ஒரு வருடத்திற்கு பின் நுழையவுள்ளார். இதனால் புதனின் இந்த ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக சிம்மம் செல்லும் புதனால் 4 ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவும், தொழிலில் நல்ல முன்னேற்றமும் ஏற்படவுள்ளது. இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 3 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் தைரியமும் வீரமும் அதிகரிக்கும். தன்னம்பிக்கை மேம்படும். ஆளுமையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணம் சம்பாதிக்க எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டில் உள்ளோரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். முக்கியமாக இக்காலத்தில் உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலமானது துலாம் ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. உடன் வேலை செய்வோர் உங்கள் செயல்திறனை பாராட்டுவார்கள். பழைய முதலீடுகளால் நல்ல ஆதாயம் கிடைக்கும். பங்குச் சந்தையில் முதலீடு செய்தால், நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
மீனம்
மீன ராசியின் 6 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலம் இந்த ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். ஏற்கனவே நீதிமன்ற வழக்குகள் நடந்தால், அதில் வெற்றி கிடைக்கும். வாகனம், சொத்து வாங்கும் எண்ணம் இருந்தால், அது நிறைவேறும். வாழ்க்கைத் துணையால் வாழ்வில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றமும், பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் தங்கள் லட்சியங்களை நிறைவேற்றும் வாய்ப்புக்களைப் பெறலாம். பணிபுரிபவர்கள் தங்கள் சிறப்பான செயல்திறனை காட்டுவார்கள். இதனால் உயர் அதிகாரிகளின் பாராட்டையும் பெறுவார்கள். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.
நிதி ரீதியாக, நல்ல பண வரவு இருந்தாலும், சற்று அதிக செலவுகளை சந்திக்க நேரிடும். இதனால் கடன் வாங்கவும் வாய்ப்புக்கள் உருவாகலாம். எனவே அதிக செலவுகளை செய்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. உறவுகளைப் பொறுத்தவரை, நன்றாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications