Latest Updates
-
இன்றைய ராசிபலன் 03 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம் -
புதன் கன்னி ராசியில் உதயமாவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பூரி பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது!
ஒரு வருடம் கழித்து சிம்மம் செல்லும் புதன்: ஜூலை 25 முதல் இந்த 4 ராசிக்காரங்க நிறைய பிரச்சனைகளை சந்திப்பாங்க..
Mercury Transit In Leo 2023: ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் வியாபாரம், கல்வி, பேச்சு, புத்திசாலித்தனம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். நவகிரகங்களில் புதன் குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர். புதன் ராசியை மாற்றும் போதெல்லாம் ஒருவரது பேச்சு, படிப்பு, தொழிலில் மாற்றங்களைக் காணக்கூடும்.
அந்த வகையில் புதன் 2023 ஜூலை 25 ஆம் தேதி சூரியன் ஆளும் சிம்ம ராசிக்கு செல்லவிருக்கிறார். ஒரு வருடம் கழித்து புதன் சிம்ம ராசிக்குள் செல்கிறார். இதனால் புதனின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

இருப்பினும் சிம்ம ராசிக்கு புதன் செல்வதால் சில ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இப்போது சிம்மம் செல்லும் புதனால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 5 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக பண விஷயத்தில் இக்காலத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலை அதிகரிக்கலாம்.
வியாபாரத்தைப் பொறுத்தவரை, இக்காலத்தில் லாபம் குறைவாகவே கிடைக்கும். மேலும் செலவுகள் அதிகமாக இருக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக நிறைய செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். அதோடு உங்களின் ஆரோக்கியமும் பாதிக்கப்படலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். பணப் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் பதவி உயர்வுக்காக காத்துக் கொண்டிருந்தால், இன்னும் காத்திருக்க வேண்டும்.
வியாபாரிகளுக்கு இக்காலத்தில் மந்தமாக இருக்கும். போட்டியாளருடன் கடுமையான போட்டியை சந்திக்க நேரிடும். இக்காலகட்டத்தில் எந்த ஒரு வேலையையும் யோசிக்காமல் செய்யாதீர்கள். இல்லாவிட்டால், இழப்பையும், பிரச்சனையையும் சந்திக்க நேரிடும். ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
கடகம்
கடக ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலகட்டத்தில் இந்த ராசிக்காரர்கள் அலுவலகத்தில் அதிக வேலைப்பளுவை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டை பெற முடியாது.
இக்காலத்தில் வெற்றிகள் கிடைக்காது. சற்று பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். வியாபாரிகளுக்கு எவ்வித லாபமும் கிடைக்காது. எவ்வளவு கடினமாக உழைத்தாலும், அதற்கேற்ற பலன் கிடைக்காது. மொத்தத்தில் எந்த காரியத்திலும் வெற்றி காண முடியாது.
கன்னி
கன்னி ராசியின் 12 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்வில் நிறைய பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். தொழில் ரீதியாக, இக்காலத்தில் பலவிதமான பிரச்சனைகள் எழும்.
வியாபாரிகளுக்கு எவ்வித லாபமும் கிடைக்காது. பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பண இழப்புக்களை சந்திக்க நேரிடும். இக்காலகட்டத்தில் பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும ஆரோக்கிய விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications