Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
12 மாதங்களுக்கு பின் மிதுனம் செல்லும் புதன்: இந்த 3 ராசிகளுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்பட போகுது..
Mercury Transit In Gemini On June 2023: நவகிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படும் புதன், தற்போது சுக்கிரன் ஆளும் ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். புதன் கல்வி, வியாபாரம், புத்திசாலித்தனம், பேச்சு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
புதன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அந்நபர் நல்ல பேச்சாற்றல் கொண்டவராகவும், வியாபாரத்தில் கொடிகட்டி பறப்பவராகவும், படிப்பில் சிறந்தவராகவும், நல்ல புத்திசாலியாகவும் இருப்பார். எனவே புதனின் நிலை ஒருவரது ஜாதகத்தில் மிகவும் முக்கியமானது.

இந்த புதன் கிரகங்களிலேயே குறுகிய காலத்தில் ராசியை மாற்றக்கூடியவர். புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். இந்த புதன் ஒரு வருடத்தின் பின் தனது சொந்த ராசியான மிதுன ராசிக்குள் ஜூன் 24 ஆம் தேதி நுழையவுள்ளார்.
புதன் தனது சொந்த ராசிக்குள் நுழைவதால், 3 ராசிக்காரர்களுக்கு வருகிற புதன் பெயர்ச்சியானது நல்ல தொழில் முன்னேற்றத்தையும் திடீர் பண வரவையும் பெற வைக்கும். இப்போது மிதுனம் செல்லும் புதனால் தொழிலில் முன்னேற்றத்தைக் காணப் போகும் அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் திடீர் பண வரவு கிடைக்கும். சிக்கிய பணம் திரும்ப கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. சம்பள உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், அதை இக்காலத்தில் செய்தால் நற்பலனைப் பெறலாம். பேச்சு தொடர்பான வேலையில் இருப்பவர்களுக்கு இக்காலம் மங்களகரமானதாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசியின் அதிபதி புதன். இந்த புதன் தொழில் வீடான 10 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். இதன் காரணமாக நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு இக்காலத்தில் புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மேலும் பதவி உயர்வுக்கும் வாய்ப்புள்ளது. மொத்தத்தில் இந்த புதன் பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 5 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த புதன் பெயர்ச்சியானது கும்ப ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களை வழங்கும். முக்கியமாக ஊடகம், ஆன்மீகம் போன்ற துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். திருமணமானவர்கள் குழந்தை பாக்கியத்தைப் பெறலாம். குடும்ப சூழல் மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே அன்பும், நெருக்கமும் அதிகரிக்கும். காதலிப்பவர்களுக்கு இக்காலம் அற்புதமாக இருக்கும். பங்குச் சந்தையில் முதலீடு செய்தால், நல்ல பண ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications