Latest Updates
-
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும்
ஒரு வருடத்திற்கு பின் மிதுனம் செல்லும் புதன்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப் போகுது..!
Mercury Transit In Gemini On 24 June 2023: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுகின்றன. அப்படி மாற்றும் போது கிரகங்கள் தனது சொந்த ராசியில் பல காலம் கழித்து பயணிக்கும்.
அப்படி சொந்த ராசியில் ராசிநாதன் பயணிக்கும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே சிறப்பு தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் புத்திசாலித்தனம், படிப்பு, வியாபாரம், பேச்சு ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் புதன், 1 வருடத்தின் பின் தனது சொந்த ராசியான மிதுன ராசிக்குள் ஜூன் 24 ஆம் தேதி நுழைகிறார்.

இதனால் இந்த புதன் பெயர்ச்சியானது சற்று சிறப்பானது. மேலும் இதன் தாக்கம் 3 ராசிகளில் சிறப்பாக இருக்க போகிறது. அதுவும் அந்த 3 ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தை, திடீர் செல்வத்தை, முன்னேற்றத்தை பெறப் போகிறார்கள்.
இப்போது 2023 ஜூன் 24 ஆம் தேதி புதன் தனது சொந்த ராசிக்கு செல்வதால், எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
கன்னி
கன்னி ராசியின் அதிபதி புதன். இந்த புதன் பெயர்ச்சியின் போது 10 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இந்த வீடு தொழில் மற்றும் வியாபாரத்தின் வீடாகும். இதனால் இக்காலத்தில் தொழிலில் நற்பலன்கள் கிடைக்கப் போகிறது. வியாபாரிகள் நல்ல லாபத்தையும், வெற்றியையும் பெறப் போகிறார்கள். மேலும் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் நல்ல வளர்ச்சியைக் காணப் போகிறார்கள். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையை மாற்ற நினைத்தால், இக்காலத்தில் முயற்சித்தால், விரும்பிய வேலை கிடைக்கும். தந்தையுடனான உறவு இனிமையாக இருக்கும்.
மேஷம்
மேஷ ராசியின் 3 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சியானது அற்புதமாக இருக்கப் போகிறது. அதுவும் இந்த ராசிக்காரர்களின் தைரியமும், வீரமும் இக்காலத்தில் அதிகரித்து காணப்படும். வெளிநாடு தொடர்பான வேலைகளை செய்பவர்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும். எதிரிகளை இக்காலத்தில் வீழ்த்துவீர்கள். நிதி ரீதியாக இக்காலம் மிகவும் மங்களகரமானதாக இருக்கும். இதுவரை ஏதேனும் முதலீடு செய்திருந்தால், இக்காலத்தில் அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக வரும்.
கும்பம்
கும்ப ராசியின் 5 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த காலமானது கும்ப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது. ஆராய்ச்சி தொடர்பான துறையில் இருப்பவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். காதல் உறவுகள் சிறப்பாக இருக்கும். இக்காலத்தில் நல்ல பண பலன்கள் கிடைக்கும். உங்கள் கையில் பணம் அதிகம் சேரும். குழந்தைகளால் நற்செய்திகளைப் பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications