Latest Updates
-
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம்
ஒரு வருடத்திற்கு பின் மிதுனம் செல்லும் புதனால் ஜூன் 24 முதல் இந்த ராசிகளுக்கு செம சூப்பரா இருக்கப் போகுது..
Mercury Transit In Gemini On 24 June 2023: நவகிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், கல்வி, வியாபாரம், பேச்சு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
புதன் ஒவ்வொரு ராசியிலும் சுமார் 2-3 வாரங்கள் வரை இருப்பார். ஆனால் அந்த புதன் வருடத்தில் 3-4 முறை வக்ரமாகும் போது, அதாவது பின்னோக்கி நகரும் போது, அது 10 வாரங்கள் வரை ஒரு ராசியில் இருக்கும்.

தற்போது புதன் ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2023 ஜூன் 24 ஆம் தேதி புதன் தனது சொந்த ராசியான மிதுன ராசிக்கு செல்கிறார். ஒரு வருடம் கழித்து புதன் தனது சொந்த ராசிக்கு செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே சற்று அதிகமாக காணப்படும். அது நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ இருக்கலாம். இப்போது மிதுனம் செல்லும் புதனால் 12 ராசிக்காரர்களும் பெறும் பலன்கள் என்னவென்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 3 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் புதன் பகவான் இக்காலத்தில் மகிழ்ச்சியையும், வெற்றியையும் அள்ளித் தருவார். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள் மற்றும் விளையாட்டுக்களில் வெற்றிகள் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சொந்தமாக தொழில் செய்பவர்கள், இக்காலத்தில் நற்பெயரையும், மரியாதையையும் பெறுவார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் ஊடகங்கள் மற்றும சமூக ஊடகங்கள் மூலமாக பிரபலமாக வாய்ப்புள்ளது. குறுகிய பயணங்கள் நல்ல லாபத்தைத் தரும். இக்காலம் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். பல ஆதாரங்களில் இருந்து பணம் கிடைக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்து இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் மிதுன ராசிக்காரர்களின் வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். இக்காலத்தில் உங்களின் ஆளுமையில் சில நல்ல மாற்றங்களைக் காணக்கூடும். உங்களின் நடத்தை மற்றவர்களை கவரும் வகையில் இருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
கடகம்
கடக ராசியின் 12 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் வெளிநாட்டு பயணங்களுக்கு வாய்ப்புள்ளது. வெளிநாட்டில் படிப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கலாம். இக்காலத்தில் செலவுகள் அதிகரிக்கும். ஆனால் அதனால் பணப் பிரச்சனை எதுவும் இருக்காது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் சமூக ஊடகங்களில் உங்களின் புகழ் அதிகரிக்கும். ஊடகத் துறையில் வேலை செய்பவர்கள் இக்காலத்தில் நல்ல சிறப்பான பலனைப் பெறுவார்கள். இக்காலகட்டத்தில் சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்களுடன் தொடர்பு கிடைக்கக்கூடும்.
கன்னி
கன்னி ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். வேலை தேடுபவர்கள் நல்ல வேலையைப் பெற வாய்ப்புள்ளது. சிலருக்கு அரசு வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை இரண்டும் சிறப்பாக இருக்கும். மொத்தத்தில் இக்காலம் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வெளிநாட்டில் வேலை செய்தால் நன்றால் சம்பாதிப்பீர்கள். புதனின் நிலையால் உங்கள் அதிர்ஷ்டம் பிரகாசிப்பதால், அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 8 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் ஊகங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். முந்தைய காலத்தில் செய்த முதலீடுகள் இக்காலத்தில் நல்ல பலனளிக்கும். வியாபாரிகளுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். ஆனால் இக்காலத்தில் சிறு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பங்கு சந்தையில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் தொழில் அல்லது கூட்டு வணிகத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். காதல் வாழ்க்கை மிகவும் இனிமையாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் அமைதியும், நல்லிணக்கமும் இருக்கும்.
மகரம்
மகர ராசியின் 6 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் விளையாட்டு மற்றும் அரசியலில் இருப்பவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். மாணவர்கள் படிப்பில், தேர்வுகளில், போட்டிகளில் சிறப்பாக செயல்படுவார்கள். இருப்பினும், ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
கும்பம்
கும்ப ராசியின் 5 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் வாழ்வில் புதிய அன்பை கொண்டு வரும். சிலரது கனவுகள் நனவாகும் வாய்ப்புள்ளது. இதுவரை பொழுதுபோக்காக இருந்தவை உங்களின் வேலையாக மாறலாம். பணியிடத்தில் உங்களின் வேலைகள் அனைத்தும் மென்மையாக நடக்கும். தொழில் ரீதியாக இக்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
மீனம்
மீன ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் தொழிலில் முன்னேறுவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். உங்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படும். இக்காலத்தில் அனைத்து காரியங்களிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். முக்கியமாக வாழ்க்கை அமைதியாகவும், சந்தோஷமாகவும் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications