Latest Updates
-
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: ஜூன் 14 முதல் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது..
Mercury Transit In Gemini on 14 June 2024: வேத ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார் மற்றும் இவர் பேச்சு, படிப்பு, புத்திசாலித்தனம், வியாபாரம் ஆகியவற்றின் காரணியும் கூட.

இந்த புதன் தற்போது ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஜூன் 14 ஆம் தேதி புதன் தனது சொந்த ராசியான மிதுன ராசிக்கு செல்கிறார். இந்த மிதுன ராசியில் ஜூன் 29 ஆம் தேதி வரை இருந்து, பின் கடக ராசிக்குள் நுழைவார்.
சொந்த ராசிக்கு புதன் செல்வதால் அதன் தாக்கம் சற்று சிறப்பாக இருக்கும் மற்றும் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். இப்போது மிதுன ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பண பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாக வாய்ப்புள்ளது. நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். அனைத்து துறைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய நண்பர்களை உருவாக்குவீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழிலில் நல்ல வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது.
மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் வேலையைத் தேடிக் கொண்டிருக்கும் இந்த ராசிக்காரர்கள் நல்ல வேலையைப் பெறுவார்கள். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். பணிபுரிபவர்கள் கடின உழைப்பாலும், புத்திசாலித்தனத்தாலும் உயர் அதிகாரிகளை ஈர்ப்பார்கள். இதன் விளைவாக பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றைப் பெற வாய்ப்புள்ளது. பெற்றோர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். புதனின் அருளால் அனைத்து துறைகளிலும் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு புதிய வேலை தேடி வரலாம். அலுவலகத்தில் உங்களின் வேலை பாராட்டப்படும். வணிகர்கள் சிறப்பான பேச்சுத்திறனாலும், புத்திசாலித்தனத்தாலும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications