Latest Updates
-
விபூதியை நெற்றியில் எப்படி வைக்க வேண்டும்? நெற்றியில் விபூதி வைப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? -
Vastu Tips: வீட்டில் பணம் அதிகமா சேரணுமா? அப்ப வீட்டுல இந்த செடியை வாங்கி வையுங்க.. -
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா? -
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
செப்டம்பரில் சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் யார் தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த பக்குவத்தில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
மஷ்ரூம் செட்டிநாடு மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - காரசாரமா சூப்பர் சைடிஷா இருக்கும் -
இதய நோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 பழக்கங்களை வெச்சுக்கோங்க.. -
கடல் நீர் முழுவதும் குடிநீராக மாறினால் உலகில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்!
புதன் உருவாக்கும் திரிகிரக யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பணம் கோடி கோடியா கொட்டப்போகுதாம்...!
நவகிரகங்களில் அனைத்து கிரகங்களும் தொடர்ச்சியாக ராசி மாறுதல்களுக்கு உள்ளாகின்றன. இந்த ராசி மாற்றங்களின் மூலம் சுப மற்றும் அசுப நிகழ்ச்சிகள் உருவாகும். இந்த கிரக பெயர்ச்சிகளின் விளைவுகள் அனைத்து இடங்களிலும் உணரப்படும். ஜூன் 15 ஆம் தேதி, மிதுன ராசியில் ஒரு திரிகிரக யோகம் நடைபெறுகிறது. மூன்று கிரகங்கள் ஒரே ராசியில் இருக்கும்போது திரிகிரக யோகம் உருவாகிறது.
மிதுன ராசியில் புதன், சுக்கிரன், சூரியன் ஆகிய மூன்று கிரகங்களின் இணைப்பால் திரிகிரக யோகம் உருவாகிறது. இந்த யோகத்தின் மூலம் இந்த மூன்று கிரகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் உணரப்படும். குறிப்பாக மூன்று ராசிகளுக்கு திரிகிரக யோகம் மிகவும் சாதகமாக இருக்கும். அந்த ராசிகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு காய்ந்த திரிகிரக யோகம் மிகவும் சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில், நினைத்ததை அடையும் அதிர்ஷ்டத்தைப் பெறுவார்கள், வாழ்வில் சுகபோகங்கள் அதிகரிக்கும். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்தி லாபம் அடைவார்கள்.
பணியில் இருப்பவர்களுக்கு அவர்களின் வேலையில் முன்னேற்றம் உண்டாகும். திருமணமானவர்களுக்கு தாம்பத்திய இன்பம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு இது ஒரு நல்ல காலகட்டமாக இருக்கும், உங்களுக்கு ஏற்ற துணைகள் உங்களைத் தேடி வரலாம். பார்ட்னர்ஷிப்பில் வியாபாரம் செய்பவர்களுக்கும் இந்த நேரம் சாதகமாக இருக்கும்.
கன்னி
திரிகிரக யோகம் கன்னி ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களைத் தரப்போகிறது. இவர்களின் ஜாதகத்தில் கர்ம பாவத்தில் திரிகிரக யோகம் உருவாகும். தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் நல்ல பலன் கிடைக்கும். தொழிலதிபர்கள் தொழிலில் ஆதிக்கம் செலுத்தி மேலும் வளர்ச்சி அடைய இது சாதகமான நேரம்.
வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் வந்து சேரும். பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு, மேலும் விரும்பிய இடங்களுக்கு இடமாற்றம் பெறலாம். குடும்ப உறுப்பினர்களுடன் ஒற்றுமை நீடிக்கும்.
துலாம்
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு திரிகிரக யோகம் சிறப்பான பலன்களைத் தரும். ஏனெனில் இந்த பெயர்ச்சி அவர்களின் அதிர்ஷ்ட ராசியில் உருவாகிறது. எனவே, இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டம் இந்த ராசிக்காரர்களுக்கு துணையாக இருக்கும். இந்த நேரத்தில் எதிர்காலத்திற்காக பெரிய தொகையை சேமிக்க முடியும்.
தொழில், வியாபாரம் நிமித்தமாக பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் வெற்றி பெறலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணித் துறையில் பிரபலமடையலாம். வீட்டில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
