Latest Updates
-
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார் -
மின்விசிறியை விட AC ஏன் அதிக மின்சாரத்தை பயன்படுத்துகிறது? 1 மணி நேரம் AC ஓடினால் எவ்வளவு கரண்ட் செல்வாகும்? -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகியுள்ள மாளவ்ய ராஜயோகம்: அடுத்த 2 மாதம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
அரிசி மாவு ரொட்டியும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
புதன் பெயர்ச்சியால் ஜூலை 08 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலமா இருக்கப் போகுது...
Mercury Transit In Cancer On July 2023: வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். ஒருவரது ஜாதகத்தில் புதன் நல்ல நிலையில் இருந்தால், அவர் வியாபாரத்தில் கொடிகட்டி பறப்பதோடு, பேசியே ஆளை மயக்குவதில் கில்லாடிகளாக இருப்பர்.
அதோடு, படிப்பில் கெட்டிக்காரராகவும் இருப்பர். ஏனெனில் புதன் பேச்சு, வியாபாரம், புத்திசாலித்தனம், கல்வி ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இந்த புதன் கிரகங்களிலேயே குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர்.

இந்த புதன் தற்போது மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2023 ஜூலை 08 ஆம் தேதி சந்திரன் ஆளும் கடக ராசிக்குள் நுழையவுள்ளார். புதன் கடக ராசியில் நுழைவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த புதன் பெயர்ச்சியால் பல வெற்றிகளையும், முன்னேற்றத்தையும் காணப் போகிறார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 12 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். பணிபுரிபவர்களின் நிதி நிலை சிறப்பாக இருக்கும். வியாபாரிகளுக்கு இக்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கக்கூடும். வெளிநாடு தொடர்பான வியாபாரம் செய்பவர்களுக்கு இக்காலம் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இக்காலத்தில் உங்கள் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். வியாபாரம் செய்பவர்கள் இக்காலகட்டத்தில் நல்ல லாபத்தைக் காண்பார்கள். வணிகர்கள் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புக்களைப் பெறலாம். மேலும் வேலை தேடிக் கொண்டிருந்தால், நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கக்கூடும். அதோடு உடன் வேலை செய்வோரின் ஆதரவும் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கைத் துணை முன்னேற்றத்தைக் காணக்கூடும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நல்ல நிலையில் இருப்பார்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு இக்காலம் லாபகரமானதாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி, இருவருக்குமான பிணைப்பு இன்னும் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications