Latest Updates
-
Vastu Tips: வீட்டில் பணம் அதிகமா சேரணுமா? அப்ப வீட்டுல இந்த செடியை வாங்கி வையுங்க.. -
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா? -
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
செப்டம்பரில் சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் யார் தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த பக்குவத்தில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
மஷ்ரூம் செட்டிநாடு மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - காரசாரமா சூப்பர் சைடிஷா இருக்கும் -
இதய நோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 பழக்கங்களை வெச்சுக்கோங்க.. -
கடல் நீர் முழுவதும் குடிநீராக மாறினால் உலகில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
தக்காளி தோசையும், உடுப்பி வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
புதன் பெயர்ச்சியால் ஜூன் 29 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் ஜொலிக்கப் போகுது...
Mercury Transit In Cancer On 29 June 2024: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் பேச்சு, புத்திசாலித்தனம், படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார் மற்றும் இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார்.
தற்போது புதன் ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஜூன் 14 ஆம் தேதி புதன் மிதுன ராசிக்கு செல்லவுள்ளார். அதைத் தொடர்ந்து ஜூன் 29 ஆம் தேதி சந்திரனின் ராசியான கடக ராசிக்குள் நுழையவுள்ளார்.

புதன் கடக ராசிக்குள் நுழைவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சியானது அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. அதாவது ஜூன் இறுதி முதல் ஜூலை 19 ஆம் தேதி வரை சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வெற்றிகளைப் பெறவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் பல நன்மைகளைப் பெறுவார்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றை பெறுவதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்களைப் பெற வாய்ப்புள்ளது. நிதி நிலை வலுவடைவதால் கடனில் இருந்து விடுபடுவீர்கள். காதல் வாழ்க்கையைப் பொறுத்தவரை இனிமையாக இருக்கும். முக்கியமாக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் புதிய வேலை வாய்ப்புக்களைப் பெறுவார்கள். வேலை தொடர்பாக நிறைய பயணங்களை செய்ய வேண்டியிரக்கும். இந்த பயணம் நல்ல நிதி ஆதாயத்தைத் தரும். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முக்கியமாக நிறைய பணத்தை சேமிக்க முடியும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் மீண்டும் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக முடிவடையும். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணம் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களை வழங்கும். பணிபுரிபவர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி சாதகமான பலன்களை வழங்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கி உடல் நலம் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications