Latest Updates
-
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
தினமும் வீட்டில் கற்பூரத்துடன் பிரியாணி இலை சேர்த்து எரிங்க.. அப்புறம் நடக்குறத பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க.. -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த நெல்லை ஸ்டைல் கொத்சை ட்ரை பண்ணுங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிகள் எல்லோரையும் அவங்க கட்டுப்பாட்டில் வைத்து ஆட்டி படைப்பவர்களாக இருப்பார்களாம் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பாரம்பரிய நெய் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
டாய்லெட் பேப்பரை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க
புதன் பெயர்ச்சியால் ஜூலை 08 முதல் இந்த 3 ராசிகளுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்கப் போகுது...
Mercury Transit In Cancer On 08 July 2023: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட இடைவெளியில் ராசியை மாற்றும். அந்த வகையில் நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன்.
இந்த புதன் பேச்சு, வியாபாரம், படிப்பு, புத்திசாலித்தனம், பொருளாதாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். எனவே புதன் ராசியை மாற்றும் போது, அதன் தாக்கம் ஒருவரது வாழ்வின் இந்த விஷயங்களில் எல்லாம் அதன் தாக்கம் தெரியும்.

அந்த வகையில் புதன் தற்போது மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2023 ஜூலை 08 ஆம் தேதி புதன் சந்திரன் ஆளும் கடக ராசிக்குள் நுழைகிறார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களின் மீது சிறப்புத் தாக்கம் தெரியும்.
குறிப்பாக தொழில் மற்றும் வியாபாரத்தில் இந்த 3 ராசிக்காரர்கள் நல்ல முன்னேற்றத்தையும், வெற்றியையும் பெறப் போகிறார்கள். இப்போது கடகம் செல்லும் புதனால் நற்பலனைப் பெறும் அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் அதிபதியான புதன் இந்த பெயர்ச்சியின் போது 2 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும். குறிப்பாக தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியைப் பெறக்கூடும். மேலும் எதிர்பாராத இடங்களில் இருந்து பணத்தைப் பெற வாய்ப்புள்ளது. நல்ல பண ஆதாயங்களைப் பெறக்கூடும். வங்கி இருப்பு அதிகரிக்கும். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் பேச்சு பல நற்பலனைப் பெற வைக்கும். பேச்சால் பல காரியங்களை சாதிப்பீர்கள். இக்காலத்தில் சொத்து அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் அமையும்.
கன்னி
கன்னி ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இப்பெயர்ச்சியால் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படலாம். பரம்பரை தொழிலை செய்து வருபவர்களுக்கு நல்ல லாபமும், வெற்றியும் கிடைக்கும். வியாபாரம் செய்து வருபவர்களுக்கு இக்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். ஏற்கனவே முதலீடு செய்திருந்தால், இக்காலத்தில் அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மகரம்
மகர ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இதுவரை ஏதேனும் நீதிமன்ற வழக்குகள் நடைபெற்று வந்தால், அதில் தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக வரும் வாய்ப்புள்ளது. புதனின் அருளால் இக்காலத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருப்பதால், அனைத்திலும் நல்ல வெற்றியைக் காண்பீர்கள். முக்கியமாக இக்காலகட்டத்தில் வாழ்க்கைத் துணையால் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். கூட்டு தொழில் தொடங்கும் எண்ணம் இருந்தால், அதை இக்காலத்தில் செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications