Latest Updates
-
அக்டோபர் 24-ல் வக்ரமடையும் புதன்: இந்த 5 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனைகளை சந்திப்பாங்க.. உஷார்.. -
உங்கள் பழைய வெள்ளி நகைகளை செலவே இல்லாமல் வீட்டிலேயே புதிது போல மாற்றும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்கள பத்தி சொல்றோம்.. -
இராவணனுக்கு 10 தலைகள் கிடைத்ததற்கு பின்னால் உள்ள கதை என்ன தெரியுமா? அந்த 10 தலைகளின் அர்த்தம் என்ன தெரியுமா? -
3/4 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி கெட்டி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
பொரி மிச்சமிருந்தா இந்த மாதிரி மொறுமொறுனு வடை சுடுங்க - டீ, காபியோட சாப்பிட சூப்பரா இருக்கும் -
லென்ஸ் போட்டிருக்கீங்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க.. பார்வைக்கே ஆபத்தாயிடும் - எச்சரிக்கும் கண் டாக்டர்! -
பாபா வங்கா கணிப்பு படி 2027-ல் உலகத்தில் நடக்கப்போகும் மாற்றங்களும், அழிவுகளும் - ஷாக் ஆகாதீங்க -
நவம்பரில் சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
நாயர் கடை வெங்காய சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
புதன் மேஷ ராசிக்கு செல்வதால் அடுத்த 1 மாசத்துக்கு இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் அடிக்கப்போகுதாம்...!
Mercury Transit In Aries: கிரகங்கள் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகர்வது கிரகப் பெயர்ச்சி என்று குறிப்பிடப்படுகிறது. இத்தகைய கிரக மாற்றங்கள் நடக்கும் போது அது அனைத்து ராசிகளிலும் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் இந்த மாற்றங்கள் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். சில ராசிகளின் சொந்தக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி மிகவும் பலனளிக்கும் அதே வேளையில், மற்றவர்களுக்கு இது ஒரு சோதனையான காலமாக இருக்கும்.

2024 மே மாதத்தில் நடைபெறும் புதன் பெயர்ச்சி, சில ராசிக்காரர்களுக்குப் பெரும் பணப் பலன்கள் கிடைக்கும் என்பதற்கான தெளிவான அறிகுறிகள் உள்ளன. இந்த பதிவில், மேஷ ராசியில் புதன் சஞ்சரிக்கும் நேரம் சில ராசிக்காரர்கள் அளவில்லாத நிதி பலன்களைப் பெறப்போகிறார்கள். அவர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேஷ ராசியில் புதன் பெயர்ச்சி நடைபெறும் தேதி மற்றும் நேரம் என்ன?
மேஷ ராசியில் புதன் பெயர்ச்சி 10 மே 2024 அன்று மாலை 06:39 மணிக்கு நிகழும். வேத ஜோதிடத்தில், புதன் கிரகம் புத்திசாலித்தனம் மற்றும் கற்றலின் காரணியாக கருதப்படுகிறது. புதன் ஒரு ராசியில் ஒரு மாதம் தங்கியிருந்து பின் தன் நிலையை மாற்றிக் கொள்கிறார். இந்த புதன் சஞ்சாரம் வெவ்வேறு ராசிக்காரர்களுக்கு பலவிதமான விளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக இந்த பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு நினைத்து பார்க்க முடியாத யோகத்தைக் கொடுக்கப்போகிறது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு முதல் மற்றும் நான்காம் வீட்டிற்கு அதிபதி புதன். இந்த பெயர்ச்சி மூலம் பதினொன்றாவது வீட்டில் புதன் சஞ்சரிக்கப் போகிறார், இது மக்களுக்கு பெரும் நிதி ஆதாயத்தை ஏற்படுத்தும். இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும், இதனால் மிதுன ராசிக்காரர்களின் ஒட்டுமொத்த பலம் அதிகரிக்கப் போகிறது.
உங்கள் கடின உழைப்பு சிறந்த பலன்களைத் தரும் மற்றும் அனைத்து வகையான பண ஆதாயங்களும் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் அதிக லாபம் ஈட்டுவீர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களின் இரண்டாவது மற்றும் பதினொன்றாம் வீட்டிற்கு அதிபதியான புதன் இப்போது ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இந்த காலகட்டத்தில், உங்கள் கடின உழைப்புக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். சிம்ம ராசிக்காரர்களுக்கு மகத்தான வெற்றி வாய்ப்புகள் உள்ளன.
பணப்புழக்கம் அவர்களுக்கு நன்றாக இருக்கும், மேலும் அவர்கள் தங்கள் செலவுகளை சாமர்த்தியமாக நிர்வகிக்க முடியும். இது சிம்ம ராசிக்காரர்களுக்கு நிறைய சேமிப்புகளை வழங்கும். கடந்த காலங்களை விட இப்போது அதிக பணத்தை சேமிக்க முடியும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு ஒன்பதாம் மற்றும் பன்னிரண்டாம் வீட்டிற்கு அதிபதியான புதன் இப்போது ஏழாவது வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வுகள் மூலம் வருமானம் அதிகரிப்பதற்கான வலுவான அறிகுறிகள் உள்ளன.
இது தவிர துலாம் ராசிக்காரர்கள் தங்கள் பணியிடத்தில் பெரும் நன்மைகளைப் பெறுவார்கள். ஷேர் மார்க்கெட் மற்றும் டிரேடிங் மூலம் நிறைய பணம் சம்பாதிக்கவும் வாய்ப்புள்ளது. இது துலாம் ராசிக்காரர்களின் ஒட்டுமொத்த நிதி நிலையை பலப்படுத்தும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு ஆறு மற்றும் ஒன்பதாம் வீட்டிற்கு அதிபதியான புதன் நான்காம் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். இது மகர ராசிக்காரர்களின் நிலையான நிதி நிலைமையை பலப்படுத்தும் மற்றும் அவர்கள் வெவ்வேறு வழிகளில் பெரும் லாபம் ஈட்ட முடியும். இந்த புதன் சஞ்சாரத்தின் போது, பல்வேறு முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்களின் பணியிடத்தில் பதவி உயர்வுகளும் கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன, அது உங்களை திருப்திப்படுத்தும். சம்பாதிப்பதைத் தவிர, இந்த காலகட்டத்தில் நீங்கள் ஒரு நல்ல தொகையை சேமிக்கவும் முடியும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

