Latest Updates
-
வார ராசிபலன் (19 July 2026-25 July 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது..! -
பரோட்டா கடை சிக்கன் சால்னா டேஸ்ட்டா இருப்பதன் ரகசியம் இதாங்க! -
ராகு-கேதுவின் பிடியில் இருந்து விடுபடும் 6 கிரகங்கள்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்! -
தினமும் சிறிது முருங்கை இலையை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
பட்டாணி சாதமும், கத்திரிக்காய் கிரேவியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்று ஒரே நாளில் உருவாகும் ஹன்ஸ், கஜகேசரி ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கும்! -
சர்க்கரை நோயாளிகளுக்கான அவல் இட்லியும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க! -
இன்றைய ராசிபலன் 18 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
குரு-சூரிய சேர்க்கையால் உருவான மகாலட்சுமி ராஜயோகம்: ஆடியில் இந்த 3 ராசிக்கு கையில் பணம் குவியும்! -
புதன்-செவ்வாய் உருவாக்கும் தசாங்க யோகத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
புதன் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. உங்க ராசி என்ன?
Mercury Transit In Aries 2024: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவார். அப்படி மாற்றும் போது அதன் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் தெரியும். அதில் சிலருக்கு சாதகமாகவும், சிலருக்கு பாதகமாகவும் இருக்கலாம்.
அந்த வகையில் கிரகங்களின் இளவரசனான புதன், பேச்சு, புத்திசாலித்தனம், படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். இந்த புதன் மே 10 ஆம் தேதி செவ்வாய் ஆளும் மேஷ ராசிக்குள் நுழைந்துள்ளார். இந்த மேஷ ராசியில் மே 30 ஆம் தேதி வரை இருப்பார். அதன் பின் ரிஷப ராசிக்குள் நுழைவார்.

இந்த புதன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. குறிப்பாக தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்பம். நிதி நிலைமை வலுவடையும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு அதிர்ஷ்டமான காலமாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படக்கூடும். சிலர் புதிய வருமான ஆதாரங்களைப் பெறலாம். இது தவிர புதிய தொழில் தொடங்குவதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். பங்குச் சந்தை, லாட்டரி மூலம் நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்கள் புதிய வணிக ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். இந்த ஒப்பந்தங்கள் எதிர்காலத்தில் நல்ல நிதி நன்மைகளைத் தருவதாக இருக்கும்.
கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பெரிய அளவில் பணத்தை சம்பாதிப்பீர்கள். உங்களின் வேலை அலுவலகத்தில் பாராட்டைப் பெறும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications