Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
புதன் பெயர்ச்சியால் மார்ச் 31 முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப் போகுது...
Mercury Transit In Aries On 31 March 2023: நவகிரகங்களில் புத்திசாலித்தனம், வியாபாரம், கல்வி, பேச்சு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் குறுகிய காலத்தில் ராசியை மாற்றுவார். மேலும் புதனின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் புதன் தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2023 மார்ச் 31 ஆம் தேதி புதன் செவ்வாய் ஆளும் மேஷ ராசிக்கு செல்கிறார்.
இந்த மேஷ ராசியில் புதன் ஜூன் 07 ஆம் தேதி வரை இருந்து, பின் ரிஷப ராசிக்கு செல்வார். மேஷம் செல்லும் புதனின் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி நற்பலன்களை வாரி வழங்கவுள்ளது. இப்போது மேஷ ராசிக்கு செல்லும் புதனால் நற்பலனைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கப் போகிறது. வேலையை மாற்ற நினைத்தால், இக்காலம் சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்களின் செயல்திறனால் பாராட்டைப் பெறுவார்கள். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் நல்ல பண ஆதாயம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களுடனான உறவு மேம்படும். புதனின் நிலையால் அனைத்து விஷயங்களிலும் வெற்றி கிடைக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வலுவாகும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடனான உறவு வலுவாக இருக்கும்.
கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் கடக ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சியானது நற்பலன்களை வாரி வழங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தினருடன் போதுமான நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். புனித யாத்திரை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். பணிபுரிபவர்கள் தங்களின் வேலையில் வெற்றியைக் காண்பார்கள். தொழில் ரீதியாக, இக்காலம் லாபத்தை வாரி வழங்கும் சிறப்பான காலமாக இருக்கும்.
மீனம்
மீன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் கடின உழைப்பிற்கான முழு பலனும் கிடைக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் செயல்திறனால் பாராட்டைப் பெறுவார்கள். பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. திருமணமாகாதவர்களுக்கு நல்ல திருமண வரன் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications



