Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
மேஷம் செல்லும் புதனால் இன்று முதல் இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படப் போகுது...
Mercury Transit In Aries on 31 March 2023: நவகிரகங்களில் வியாபாரம், கல்வி, பேச்சு, புத்திசாலித்தனம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். இந்த புதன் கிரகங்களிலேயே மிகச்சிறிய கிரகம் மற்றும் இது குறுகிய காலத்தில் ராசியை மாற்றும். இப்படிப்பட்ட புதன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அவர் நல்ல பேச்சாற்றல் கொண்டவராக இருப்பதோடு, வியாபாரம் செய்தால், அதில் நல்ல லாபத்தைப் பெறுபவர்களாக இருப்பர்.
கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் 2023 மார்ச் 31 ஆம் தேதி மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு மாறியுள்ளார். இப்படி புதன் ராசியை மாற்றியுள்ளதால், அதன் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இப்போது மேஷ ராசிக்கு சென்றுள்ள புதனால் 12 ராசிக்காரர்களும் பெறும் பலன்கள் என்னவென்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் தொழிலில் நன்கு கவனம் செலுத்த முடியும் மற்றும் அனைத்து வேலைகளையும் சரியான நேரத்தில் முடித்துவிடுவீர்கள். மாணவர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்கும். பத்திரிக்கையாளர்கள் தங்களின் கருத்துக்களை சிறப்பாக வெளியிட முடியும். ஆனால் இக்காலம் நிதி முதலீட்டிற்கு சிறந்த காலம் அல்ல. ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். இக்காலத்தில் அதிக மன அழுத்தத்தை அனுபவிக்கக்கூடும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் மாணவர்கள் தங்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகும். வியாபாரிகள் நிதி பிரச்சனைகளை சந்திக்கலாம். வெளிநாட்டில் இருப்பவர்கள் சில நற்செய்திகளைப் பெறக்கூடும். மருத்துவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். தனியார் துறையில் வேலை செய்பவர்கள் சில பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம். ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. உங்கள் வாழ்க்கைத் துணையை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழல் உருவாகலாம்.
மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். தொழிலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். இலக்குகளை அடைய ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, சில வாக்குவாதங்கள் ஏற்படலாம். ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் மாணவர்கள் கடினமாக உழைத்தால், தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி காணலாம். வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்ளுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். பேச்சு தொடர்பான வேலையில் இருப்பவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். ஆஸ்துமா, மன அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், கவனமாக இருக்க வேண்டும். உங்கள் பொழுதுபோக்கை முழு நேரத் தொழிலாக மாற்றலாம். இக்காலத்தில் உங்களின் தகவல் தொடர்பு திறன் நன்றாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களின் ஆசை நிறைவேறலாம். பரம்பரை தொழிலை செய்து வருபவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். அரசியல், ஆசிரியர் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்கும். முக்கியமாக நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வுக்கான வாய்ப்புள்ளது. வீட்டில் வயதானவர்கள் இருந்தால், அவர்களின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
கன்னி
கன்னி ராசியின் 8 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் ஆராய்ச்சி துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்கும். இக்காலத்தில் எக்காரணம் கொண்டும் உங்கள் இலக்கில் இருந்து விலகாதீர்கள். உங்கள் வேலையை மாற்ற வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டம் சாதகமாக இருக்காது. அலுவலகத்தில் சூழ்நிலை குழப்பமாகவும் அசாதாரணமாகவும் இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பேசும் போது வார்த்தைகளை பார்த்து பயன்படுத்துங்கள். உயர் அதிகாரிகளுடன் பழகும் போது சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
துலாம்
துலாம் ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரிகள் நல்ல ஆதரவைப் பெறுவார்கள் மற்றும் வேலை செய்பவர்களின் முடிவெடுக்கும் திறன் மேம்படும். பேச்சாமல் மற்றவர்களை எளிதில் ஈர்ப்பீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். சமூகத்தில் உங்களின் நற்பெயர் மேம்படும். முக்கிய முடிவுகளை எடுக்கும் போது குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 6 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெறுவார்கள். தங்களின் முயற்சியால் அனைத்து வேலைகளிலும் வெற்றி காண்பார்கள். மருத்துவ துறையில் இருப்பவர்கள் தங்களின் தொழிலில் வளர்ச்சியைக் காண்பார்கள். வியாபாரிகளுக்கு இக்காலம் ஏமாற்றம் நிறைந்ததாக இருக்கும். நிதி நிலையை கவனமாக கையாள வேண்டும். அதிக செலவுகளைத் தவிர்க்க வேண்டும்.
தனுசு
தனுசு ராசியின் 5 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கலாம். மாணவர்கள் சில கவனச்சிதறல்களை சந்திக்க நேரிடலாம். இருப்பினும் முயற்சித்தால், நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகள் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம். நிதி நிலையில் முன்னேற்றத்தைக் காணும் வாப்புள்ளது.
மகரம்
மகர ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் வேலையில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். ஆனால் பணியிடத்தில் உடன் பணிபுரிபவர்களுடன் வாக்குவாதம் மற்றும் சண்டைகளை சந்திக்க வேண்டியிருக்கும். வியாபாரிகளுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். தாயுடனான உறவு நன்றாக இருக்கும். நோயால் அவதிப்பட நேரிடும். நிதி நிலையை மனதில் கொண்டு செலவழிக்க வேண்டும்.
கும்பம்
கும்ப ராசியின் 3 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் மாணவர்கள் முயற்சி செய்தால் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். இக்காலத்தில் கடின உழைப்பிற்கான பலன்கள் முழுமையாக கிடைக்கும். வியாபாரிகள் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்புள்ளதால், புதிய ஒப்பந்தங்களைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். செலவு விஷயத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
மீனம்
மீன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சம்பள உயர்வைப் பெறலாம். பதவி உயர்வைப் பெறவும் வாய்ப்புள்ளது. பரம்பரை வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தைக் காணலாம். இக்காலத்தில் நிறைய பணத்தை சேமிக்க முடியும். நிதி நிலை நன்றாக இருக்கும். சொத்து, நிலம், வாகனம் போன்றவற்றை வாங்க வாய்ப்புகள் கிடைக்கும். மொத்தத்தில் இனிமேல் அற்புதமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications