Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
1 வருடத்திற்கு பின் மேஷம் செல்லும் புதன்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்..
Mercury Transit In Aries On 26 March 2024: வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, தொடர்பு, வணிகம், பங்குச் சந்தை, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இப்படிப்பட்ட புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார்.
இந்த புதன் தற்போது குரு பகவானின் ராசியான மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் வருகிற மார்ச் 26 ஆம் தேதி புதன் செவ்வாயின் ராசியான மேஷ ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த மேஷ ராசிக்கு சுமார் 1 வருடத்திற்கு பின் செல்லவுள்ளார். இதனால் இந்த புதன் பெயர்ச்சியின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த புதன் பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறவுள்ளார். அதோடு, நிதி நிலையிலும் முன்னேற்றத்தைக் காணவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
தனுசு
தனுசு ராசியின் 5 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் குழந்தைகளால் நல்ல செய்திகளைப் பெறுவார்கள். போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள் நல்ல சாதகமான பலன்களைப் பெறுவார்கள். காதலித்து வந்தால், இக்காலத்தில் உங்கள் காதல் வெற்றி பெறும். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். நம்பிக்கை அதிகரிக்கும். மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். பணியிடத்தில் எடுக்கும் முடிவுகள் நல்ல பாராட்டைப் பெறும். சமூகத்தில் நல்ல மரியாதையைப் பெறுவீர்கள். திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் பெரிய உயர்வு ஏற்படும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் முதலீடுகளை செய்தால் நல்ல லாபத்தைப் பெறலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
