Latest Updates
-
1 கப் தேங்காயும், 1 கைப்பிடி புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 04 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
100 ஆண்டுகள் கழித்து நிகழும் அபூர்வ கிரக பெயர்ச்சி: ஜூன் 11-ல் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்! -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. ஒருவாட்டி இந்த சட்னியை செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
முகத்தில் கரும்புள்ளிகள் அதிகமா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகியுள்ள சமசப்தக் யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியும்! -
கொத்தமல்லி மாங்காய் சாதமும், உருளைக்கிழங்கு வறுவலும் - 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாருங்க.. -
உஷார்.. இந்த 5 உணவுகள் ஒருவரது ஆயுளை பாதியாக குறைக்குமாம்.. எச்சரிக்கும் டாக்டர். பிள்ளை! -
கடகம் செல்லும் சுக்கிரன்: ஜூன் 08 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.! -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை குறையும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் இருப்பீங்க..
புதன் பெயர்ச்சி: பிப்ரவரி 20 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் ஜொலிக்கப் போகுது..
Mercury Transit In Aquarius On February 2024: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், படிப்பு, பேச்சு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் புதன் நல்ல நிலையில் இருந்தால், அந்நபர் தொழில், படிப்பு போன்றவற்றில் கெட்டிக்காரராக இருப்பார்.
இப்படிப்பட்ட புதன் 27 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். தற்போது புதன் சனி பகவானின் மகர ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் பிப்ரவரி 20 ஆம் தேதி புதன் சனி பகவானின் மூலதிரிகோண ராசியான கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார்.

கும்ப ராசிக்கு புதன் செல்வதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் இந்த பெயர்ச்சிக்கு பின் பிரகாசிக்கப் போகிறது. முக்கியமாக தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபமும், முன்னேற்றமும் ஏற்படப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் இப்பெயர்ச்சிக்கு பின் எதிர்பாராத பண வரவைப் பெறுவார்கள். பேச்சால் பல பிரச்சனைகள் தீரும் மற்றும் புதிய உறவுகளைப் பெற வாய்ப்புள்ளது. ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கி, உடல்நலம் மேம்படும். தொழிலில் துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள். இந்த முடிவுகளும் நல்ல பலனைத் தரும். நிதி நிலை வலுவாக இருக்கும். மார்கெட்டிங், ஊடகம், பேச்சு தொடர்பான துறைகளில் இருப்பவர்கள் நல்ல வருமானத்தை இக்காலத்தில் பெறுவார்கள்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் இப்பெயர்ச்சிக்கு பின் அதிர்ஷ்டத்தின் ஆதரவை பெறுவார்கள். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். சமூகத்தில் உங்களின் மரியாதையும், கௌரவமும் உயரும். வேலையை மாற்ற எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. சிலர் புதிய வருமான ஆதாரங்களைப் பெறலாம். முதலீடுகளால் நிறைய லாபத்தைப் பெறக்கூடும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சிலர் புதிய பொறுப்புக்களைப் பெறலாம். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் செய்யும் முதலீடுகளால் நிறைய பணத்தை சம்பாதிப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications