Latest Updates
-
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
புதனின் அருளால் மார்ச் 07 வரை இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும்.. உங்க ராசி என்ன?
Mercury Transit In Aquairus On 20 February 2024: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். நவகிரகங்களில் இளவசரனாக கருதப்படுபவர் தான் புதன். இந்த புதன் குறுகிய நாட்களில் ராசியை மாற்றுவார். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார்.
இந்த புதன் கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி சனி பகவானின் ராசியான கும்ப ராசிக்குள் நுழைந்தார். இந்த கும்ப ராசியில் மார்ச் 07 ஆம் தேதி வரை இருந்து, பின் குரு பகவானின் ராசியான மீன ராசிக்கு செல்வார். புதன் ஒவ்வொரு முறை ராசியை மாற்றும் போதும், புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் போன்றவற்றில் அதன் தாக்கம் தெரியும்.

கும்ப ராசியில் பயணிக்கும் புதனின் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் புதனின் இந்நிலையால் சிறப்பான நிதி நன்மைகளைப் பெறவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் பயணித்து வருகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் நல்ல வேலையைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் புதனின் அருளால் பதவி உயர்வைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. இக்காலத்தில் வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். புதிய தொழிலை இக்கால கட்டத்தில் தொடங்கினால், புதனின் ஆசியால் அதில் நல்ல லாபத்தைப் பெறக்கூடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் பயணித்து வருகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் புதனின் ஆசியால் மகத்தான நிதி நன்மைகளைப் பெறுவார்கள். சிலர் புதிய வருமான ஆதாரங்களைப் பெறக்கூடும். நிதி நிலை வலுபெறும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தொழிலில் புத்திசாலித்தனமாக முதலீடு செய்தால், எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறலாம்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் பயணித்து வருகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். வேலை தொடர்பாக நிறைய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த பயணங்கள் நல்ல நிதி ஆதாயங்களைத் தருவதாக இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு இக்காலகட்டம் சாதகமாக இருக்கும். சிலர் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. நிதி ரீதியாக, நிறைய நிதி நன்மைகளைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
