Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
புதன் பெயர்ச்சியால் உருவாகும் 2 ராஜயோகங்கள்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்..
Mercury Transit 2024 Will Make Shash And Budhaditya Rajyog: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் பேச்சு, வியாபாரம், புத்திசாலித்தனம், படிப்பு ஆகியவற்றின் காரணியாவார். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். இந்த புதன் தற்போது மகர ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் பிப்ரவரி 20 ஆம் தேதி புதன் சனி பகவானின் மற்றொரு ராசியான கும்ப ராசிக்கு செல்லவுள்ளார். ஏற்கனவே கும்ப ராசியில் சனி பயணித்து வருவதால் சச ராஜயோகம் உருவாகியுள்ளது. அத்துடன் இந்த ராசியில் சூரிய பகவானும் பயணித்து வருவதால், புதன் பெயர்ச்சிக்கு பின் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.

இந்த இரண்டு ராஜயோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும் 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் இந்த இரண்டு ராஜயோகங்களால் பிரகாசிக்கவுள்ளது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் சச மற்றும் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் பெரிய உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே பிணைப்பு அதிகரிக்கும். பழைய முதலீடுகளால் நல்ல ஆதாயமடைவீர்கள். இக்கால கட்டத்தில் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால், அதில் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள்.
கடகம்
கடக ராசியின் 8 ஆவது வீட்டில் சச மற்றும் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் நல்ல மரியாதையைப் பெறுவார்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புதிய வேலையைத் தொடங்கினால் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். ஆராய்ச்சி துறையில் இருப்பவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் சச மற்றும் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் திருமணமான இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள். இதனால் வேலையில் ஒரு நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். கூட்டு தொழில் தொடங்க நினைத்தால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். சனி பகவானின் அருளால் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications