Latest Updates
-
டக்குன்னு சமையலை முடிக்கணுமா? அப்ப தயிர் இருந்தா, 10 நிமிஷத்துல இப்படி குழம்பு செய்யுங்க.. -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் குருபகவான்: அக்டோபர் முதல் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் தீர போகுது! -
இன்றைய ராசிபலன் 29 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
பூரிக்கு ஒருவாட்டி இந்த பக்குவத்துல உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
செப்டம்பர் 01-ல் சனி-குருவால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: தொழிலில் அபார வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிகள்! -
சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் அக்டோபர் வரை ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
சுரைக்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
கர்நாடகா சுரைக்காய் சட்னி ரெசிபி - இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
செப்டம்பரில் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
Krishna Janmashtami 2026: கிருஷ்ண ஜெயந்தி எப்போது வருகிறது? வீட்டில் எப்படி பூஜை செய்யணும் தெரியுமா?
சனி புதனால் உருவாகும் சமசப்தம யோகம்: செப்டம்பர் 18 முதல் இந்த 3 ராசிகளின் கையில் பணம் அதிகம் சேரும்..
Mercury Saturn Make Samsaptak Yoga: ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றம், பார்வை, சேர்க்கை மற்றும் நிலைகளுக்கு சிறப்பான முக்கியத்துவம் உள்ளது. சில சமயங்களில் கிரகங்களின் நிலைகளால் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாவதுண்டு. அப்படி உருவாகும் யோகங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் நட்பு கிரகங்கள் இரண்டின் சேர்க்கையால் உருவாகும் யோகங்கள் நல்ல நிதி நன்மைகளை வழங்கும்.
அந்த வகையில் நட்பு கிரகங்களான சனியும், புதனும் செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் நேருக்கு நேர் பயணிப்பதால் சமசப்தம யோகம் உருவாகிறது. இக்காலத்தில் புதன் சிம்ம ராசியிலும், சனி கும்ப ராசியிலும் நேருக்கு நேர் உள்ளனர். ஏற்கனவே சிம்ம ராசியில் சூரியன் புதனுடன் இருப்பதால், புதன் வழவிழந்து இருக்கும்.

ஆனால் செப்டம்பர் 17 ஆம் தேதி சூரியன் கன்னி ராசிக்கு செல்வதால், செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் புதன் வலிமையாகி, நற்பலன்களை வாரி வழங்குவார். இப்போது சூரியன் மற்றும் புதனால் உருவாகும் சமசப்தம யோகத்தால் எந்த ராசிக்காரர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 5 ஆவது வீட்டில் புதனும், 11 ஆவது வீட்டில் சனியும் உள்ளனர். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். இந்த ராசிக்காரர்களின் மிகப்பெரிய ஆசைகள் அனைத்தும் இக்காலகட்டத்தில் நிறைவேறும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதில் நிறைய லாபம் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டில் புதனும், 7 ஆவது வீட்டில் சனியும் உள்ளன. இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் நன்கு சிந்தித்து முடிவெடுப்பார்கள். இந்த முடிவுகள் நல்ல பலனைத் தருவதாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு இக்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான பிரச்சனையைக் குறைக்க மிகவும் புத்திசாலித்தனமாக செயல்படுவீர்கள். தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆனால் ஆரோக்கிய விஷயத்தில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும்.
கும்பம்
கும்ப ராசியின் 7 ஆவது வீட்டில் புதனும், முதல் வீட்டில் சனியும் உள்ளனர். இதனால் இக்காலத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆலோசனையைப் பின்பற்றினால், நல்ல பலனைப் பெறலாம். கூட்டு வணிகம் செய்பவர்கள் தங்கள் கூட்டாளர் எதேனும் ஆலோசனை வழங்கினால், அதை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். வேலை மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழிலைத் தொடங்கினால், அதில் நல்ல லாபத்தைக் காணலாம். முக்கியமாக இக்காலத்தில் மேற்கொள்ளும் பயணங்களால் நல்ல பண ஆதாயம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications