Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இளம் வயதிலேயே சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சவூதி அரேபியாவில் இந்திய ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஐயங்கார் ஸ்டைல் அஞ்சறைப் பெட்டி குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஆகஸ்ட் 28-ல் நடக்கும் சந்திர கிரகணத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துன்பங்கள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
முட்டைக்கோஸும், உருளைக்கிழங்கும் வெச்சு இப்படி கிரேவி செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
அஸ்தமன நிலையில் புதன்! அடுத்த 3 வாரங்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
ராகு-கேது பெயர்ச்சியால் டிசம்பர் மாதம் வரை நரகத்தை அனுபவிக்கப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வரகரிசியும், வாழைப்பழமும் இருந்தா இந்த ஆரோக்கியமான பணியாரத்தை செய்யுங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும் -
பார்லர் போகாமலேயே முகத்தில் வளரும் முடியை நீக்கணுமா? இந்த 5 ஃபேஸ் பேக்கை போடுங்க போதும்..
மீன ராசியில் உதயமாகியுள்ள புதன்: அடுத்த ஒரு வாரம் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றி குவியும்..
Mercury Rise In Pisces On March 2024: வேத ஜோதிடத்தில், நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் பேச்சு, புத்திசாலித்தனம், படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். தற்போது புதன் மீன ராசியில் பயணித்து வருகிறார். மீன ராசியில் நுழையும் சமயத்தில் புதன் அஸ்தமன நிலையில் இருந்தார். இந்நிலையில், சமீபத்தில், அதாவது மார்ச் 15 ஆம் தேதி புதன் மீன ராசியில் உதயமானார்.
மீன ராசியில் புதன் உதயமானதால், புதனால் கிடைக்கவிருந்த நற்பலன்களில் இருந்த தடை நீங்கி, சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசித்து, தொழில் வாழ்க்கையில் வெற்றியும், லாபமும் கிடைக்கும். இப்போது மீன ராசியில் உதயமாகியுள்ள புதனால் தொழிலில் நல்ல பலனைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் உதயமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் குழந்தை தொடர்பான நல்ல செய்திகளைப் பெறுவார்கள். மாணவர்களுக்கு சிறப்பாக இருக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சிறப்பான செயல்திறனால் வேலைகளை வெற்றிகரமாக முடித்து, பாராட்டுக்களைப் பெறுவார்கள்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் உதயமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆரோக்கியம் மேம்படும். தாயாரின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திடீர் நிதி ஆதாயம் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சொத்து அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வேலையைத் தொடங்க சிறந்த நேரம். வியாபாரிகள் அதிக லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். நிதி நிலை வலுவடையும். செல்வம் இருமடங்கு அதிகரிக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டில் புதன் உதயமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நிதி ஆதாயம் கிடைக்கும். ஆராய்ச்சி துறையில் இருப்பவர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். சமூகத்தில் மற்றும் பணியிடத்தில் மரியாதை அதிகரிக்கும். சிலர் புதிய வருமான ஆதாரங்களைப் பெறுவார்கள். பங்குச் சந்தை, லாட்டரியில் முதலீடுகளை செய்திருந்தால் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications