Latest Updates
-
இன்றைய ராசிபலன் 23 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல செய்திகள் தேடிவரப்போகுதாம் -
வார ராசிபலன் (23 August 2026 - 29 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா -
மலபார் சிக்கன் கறி ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இளம் வயதிலேயே சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சவூதி அரேபியாவில் இந்திய ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஐயங்கார் ஸ்டைல் அஞ்சறைப் பெட்டி குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஆகஸ்ட் 28-ல் நடக்கும் சந்திர கிரகணத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துன்பங்கள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
முட்டைக்கோஸும், உருளைக்கிழங்கும் வெச்சு இப்படி கிரேவி செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
அஸ்தமன நிலையில் புதன்! அடுத்த 3 வாரங்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்!
மீன ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 15 முதல் இந்த 3 ராசிக்கு வெற்றிகள் குவியப் போகுது...
Mercury Rise In Pisces On March 2024: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். மேலும் கிரகங்களில் குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவரும் இவரே ஆவார்.
இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். புதன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், வாழ்வின் இந்த அம்சங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும். அதுவே மோசமான நிலையில் இருந்தால் மோசமாக இருக்கும்.

தற்போது புதன் கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் மார்ச் 07 ஆம் தேதி புதன் மீன ராசிக்குள் நுழையவுள்ளார். முக்கியமாக புதன் அஸ்தமன நிலையில் தான் மீன ராசிக்குள் நுழைந்துள்ளார். அதைத் தொடர்ந்து வருகிற மார்ச் 15 ஆம் தேதி புதன் மீன ராசியில் உதயமாகவுள்ளார்.
புதன் உதயமாவதால் இதுவரை புதனால் கிடைக்கவிருந்த நற்பலன்களில் இருந்த தடைகள் நீங்கி, அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. இப்போது புதன் உதயமாவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. சிலர் புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கலாம். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருந்தால், மார்ச் 15-க்கு பின் நல்ல வேலை கிடைக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். எதிர்பாராத நிதி ஆதாரயங்களைப் பெறுவீர்கள். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றின் மூலம் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் குழந்தைகள் மூலம் நல்ல செய்திகளைப் பெறுவார்கள். வேலை செய்வர்கள் பதவி உயர்வைப் பெற வாய்ப்புக்கள் கிடைக்கும். சிலருக்கு சம்பள உயர்வு ஏற்படவும் வாய்ப்புள்ளது. முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் முதலீடுகளை செய்தால், நல்ல லாபத்தைப் பெறலாம்.
கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பேச்சால் பல காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பார்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடின உழைப்பிற்கான பலன் மார்ச் 15 முதல் கிடைக்கும். புதிய வருமானத்திற்கான வழிகள் திறக்கப்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புதிய வேலைகளில் வெற்றி பெறுவீர்கள். நிறைய பணத்தை சேமித்து வெற்றி பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications