Latest Updates
-
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம்
மீன ராசியில் உதயமாகும் புதன்: ஏப்ரல் 19 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கப்போகுது..
Mercury Rise In Pisces On 19 April 2024: வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். இவர் 27 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். அதோடு அவ்வப்போது அஸ்தமனமாகி உதயமாவதுடன், வக்ர நிலையிலும் பயணிப்பார். இப்படி அடிக்கடி தனது நிலைகளில் புதன் மாற்றங்களை ஏற்படுத்துவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் தற்போது அஸ்தமன நிலையில் உள்ள புதன் வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி மீன ராசியில் உதயமாகவுள்ளார். இப்படி புதன் உதயமாவதால் அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. அதுவும் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியுடன் லாபமும் பெறக்கூடும். இப்போது மீன ராசியில் உதயமாகும் புதனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். சுப காரியங்களில் அதிகம் பங்கேற்பீர்கள். மேலும் பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் கடின உழைப்பிற்கான பலனைப் பெறுவார்கள். சிலர் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வைப் பெறலாம். மேலும் இந்த காலத்தில் பயணத்தை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்கள் நல்ல நிதி நன்மைகளைத் தருவதாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் புதன் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். வணிகர்களின் புதிய திட்டங்கள் நல்ல வெற்றியுடன், லாபத்தையும் தரும். பொருள் இன்பங்களைப் பெறுவீர்கள். அதோடு வீடு, புதிய வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். இதுவரை தாயுடன் பிரச்சனைகளை சந்தித்து வந்தால், ஏப்ரல் 19 முதல் தாயுடனான உறவு நன்றாக இருக்கும். நீண்ட காலமாக கைக்கு வராமல் இருக்கும் பரம்பரை சொத்துக்களைப் பெற வாய்ப்புள்ளது.
மகரம்
மகர ராசியின் 3 ஆவது வீட்டில் புதன் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தைரியம் மற்றும் வீரம் அதிகரிக்கும். பெற்றோருடனான உறவு நன்றாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்கும். பணிபுரிபவர்கள் இக்காலத்தில் சம்பள உயர்வைப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்கள், நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications