Latest Updates
-
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
மீன ராசியில் உதயமாகும் புதன்: இன்னும் 4 நாட்களில் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கப்போகுது...
Mercury Rise In Pisces On 19 April 2024: நவகிரகங்களின் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் தான் புதன். இந்த புதன் நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படுகிறார். இந்த புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். புதன் தற்போது மீன ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் புதன் ஏப்ரல் 19 ஆம் தேதி மீன ராசியில் உதயமாகவுள்ளார். இதனால் இதுவரை புதனால் கிடைக்கவிருந்த நற்பலன்களில் இந்த தடைகள் நீங்கி, தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். மேலும் எடுக்கும் முடிவுகளில் நல்ல பலன்கள் கிடைக்கும். இப்போது மீன ராசியில் உதயமாகும் புதனால் ஏப்ரல் 19 முதல் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 12 ஆவது வீட்டில் புதன் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் முன்னேற்றத்தில் இருந்த தடைகள் நீங்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலையை மாற்ற நினைத்தால், இக்காலத்தில் நல்ல வேலை வாய்ப்பு தேடி வரும். நிதி ரீதியாக, வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். இருப்பினும் நஷ்டமும் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால், எந்த ஒரு நிதி முடிவை எடுப்பதாக இருந்தாலும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தில் சொத்தில் முதலீடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும். புதிய சொத்தை வாங்கும் எண்ணம் இருந்தால், அது நிறைவேறும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த பயணம் நல்ல நிதி நன்மைகளைத் தருவதாக இருக்கும். பணிபுரிபவர்கள் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இதனால் அனைத்து வேலைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 7 ஆவது வீட்டில் புதன் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். ஒவ்வொரு துறையிலும் நல்ல வெற்றியும், நிதி நன்மைகளும் கிடைக்கும். பணிபுரிபவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். சிலர் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வைப் பெறலாம். வேலையில் ஆர்வம் அதிகரிக்கும். பண விஷயத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications