Latest Updates
-
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்..
சிம்ம ராசியில் உதயமாகும் புதன்: செப்டம்பர் 13 முதல் இந்த 3 ராசிகளின் வருமானத்தில் உயர்வு ஏற்படப் போகுது...
Mercury Rise In Leo On September 2023: ஜோதிட சாஸ்திரத்தில் நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
ஒருவரது ஜாதகத்தில் புதன் நல்ல சிறப்பான நிலையில் இருந்தால், அவர் நல்ல புத்திசாலியாகவும், பேச்சில் சிறந்தவராகவும், படிப்பில் கெட்டிக்காரராகவும், வியாபாரத்தை திறம்பட நடத்தக்கூடியவராகவும் இருப்பார்.

புதன் பலவீனமாகவோ அல்லது மோசமான நிலையிலோ இருந்தால், வாழ்வின் இந்த அம்சங்களில் மந்தமாக மற்றும் துரதிர்ஷ்டசாலியாக இருப்பார். கிரகங்களில் புதன் குறுகிய காலத்தில் தனது நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவர். புதனின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படும் போதெல்லாம், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் தற்போது சிம்ம ராசியில் பயணித்து வரும் புதன், செப்டம்பர் 13 ஆம் தேதி உதயமாகவுள்ளார். புதன் உதயமாவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
முக்கியமாக 3 ராசிக்காரர்கள் புதனின் அருளால் தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பாக செயல்பட்டு, வருமானத்தில் உயர்வை காணப் போகிறார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 3 ஆவது வீட்டில் புதன் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பரம்பரை சொத்துக்களால் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். கடின உழைப்பின் முழு பலனைப் பெறக்கூடும். கனவுகள் நனவாகும். புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் உதயமாகவுள்ளார். இதனால் செப்டம்பர் 13 முதல் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். இதன் விளைவாக தடைப்பட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு நல்ல வேலை தேடி வரும். பணிபுரிபவர்கள் மற்றும் வணிகர்கள் பயணத்தை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இந்த பயணத்தால் நல்ல பண ஆதாயம் கிடைக்கும். அரசு வேலைக்கு தேர்வு எழுதியவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டில் புதன் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நேர்மறை ஆற்றல் அதிகம் நிறைந்திருப்பார்கள். மிகுதியான தன்னம்பிக்கையைக் கொண்டிருப்பார்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு அற்புதமாக இருக்கும். இக்காலத்தில் ஒரு முக்கியமான முடிவை எடுப்பார்கள். அந்த முடிவு நல்ல வெற்றியையும், லாபத்தையும் தரும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











