கடக ராசியில் உதயமாகும் புதனால் ஜூலை 14 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கப் போகுது..

Mercury Rise In Cancer On July 2023: ஜோதிடத்தில் வியாபாரம், கல்வி, பேச்சு, புத்திசாலித்தனம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் நவகிரகங்களிலேயே மிகக்குறுகிய காலத்தில் ராசியை மாற்றுபவர்.

இந்த புதன் 2023 ஜூன் 19 ஆம் தேதி ரிஷப ராசியில் இருக்கும் போது அஸ்தமனமானார். இந்த அஸ்தமன நிலையிலேயே மிதுன ராசியில் பயணித்து, ஜூலை 08 ஆம் தேதி கடக ராசிக்கும் நுழைந்தார்.

Mercury Rise In Cancer On July 2023: These Zodiac Signs Will Get More Benefits In Tamil

இந்நிலையில் கடக ராசியில் புதன் உதயமாகவுள்ளார். அதுவும் ஜூலை 14 ஆம் தேதி புதன் உதயமாகவுள்ளார். பொதுவாக அஸ்தமன நிலையில் கிரகங்கள் வலுவிழந்து பலவீனமாக இருக்கும்.

இப்படிப்பட்ட அஸ்தமன நிலையில் இருந்து புதன் உதயமாவதால் சில ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கப் போகிறது. அதுவும் சில ராசிக்காரர்கள் நல்ல பண வரவையும், தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும் காணவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மிதுனம்

மிதுன ராசியின் அதிபதி புதன். இந்த புதன் 2 ஆவது வீட்டில் உதயமாகிறார். இதனால் இக்காலமானது மிதுன ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கப் போகிறது. இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாகனம் மற்றும் சொத்து வாங்குவதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும்.

வியாபாரம் செய்பவர்களுக்கு லாபத்தை அள்ளித் தரும். வியாபாரத்தை விரிவுப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணையால் சில நற்செய்திகளைப் பெறுவீர்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.

துலாம்

துலாம் ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் உதயமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல வெற்றியும், லாபமும் கிடைக்கும். மேலும் வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் கிடைக்கு.

பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்களின் சிறப்பான செயல்திறனால் நல்ல பாராட்டைப் பெறுவார்கள். உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். நிதி நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். புதிய வழிகளில் இருந்து பணம் உங்களைத் தேடி வரும். உங்களின் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும்.

மீனம்

மீன ராசியின் 5 ஆவது வீட்டில் புதன் உதயமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இக்காலமானது பல நற்பலன்களை வாரி வழங்கப் போகிறது. குழந்தைகளால் சில நற்செய்திகளைப் பெறுவீர்கள். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். எழுத்து மற்றும் பேச்சு தொடர்பான வேலை செய்பவர்களுக்கு இனிமேல் அற்புதமாக இருக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படக்கூடும். சிக்கிய பணம் கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Monday, July 10, 2023, 20:51 [IST]
Desktop Bottom Promotion