Latest Updates
-
ட்ராபிக் சிக்னலில் ஏன் உலகம் முழுக்க சிவப்பு, மஞ்சள், பச்சை நிறம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
முட்டைக்கோஸ் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது..
கடக ராசியில் புதன் உதயமாவதால் இன்று முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்பட போகுது...
Mercury Rise In Cancer On 14 July 2023: ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் ரிஷப ராசியில் இருக்கும் போது அஸ்தமனமானார். இந்த அஸ்தமன நிலையிலேயே மிதுன ராசியில் பயணித்தார். அதோடு கடக ராசிக்குள் நுழையும் போது அஸ்தமன நிலையில் தான் நுழைந்தார்.
இந்நிலையில் புதன் 2023 ஜூலை 14 ஆம் தேதி, அதாவது இன்று கடக ராசியில் உதயமாகவுள்ளார். புதன் பேச்சு, வியாபாரம், படிப்பு, புத்திசாலித்தனம் ஆகியவற்றின் காரணியாவார். இந்த புதன் அஸ்தமன நிலையில் இருந்தால், அவரால் கிடைக்கவிருக்கும் நற்பலன்களில் தடைகள் ஏற்பட்டிருக்கும். ஆனால் புதன் கடக ராசியில் உதயமாகிறார்.

இதனால் இன்று உதயமாகும் புதனின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக 4 ராசிக்காரர்கள் புதன் உதயமாவதால் தங்களின் தொழில் வாழ்க்கையில் சிறப்பான பலன்களையும், முன்னேற்றத்தையும் காணவுள்ளார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 4 ஆவது வீட்டில் புதன் உதயமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை இனிமேல் சிறப்பாக இருக்கப் போகிறது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். தொழில் ரீதியாக, இக்காலத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். அதுவும் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கலாம். வியாபாரிகள் நல்ல லாபத்தைக் காணலாம். இக்காலகட்டத்தில் எதிரிகளுக்கு கடுமையான போட்டியைக் கொடுப்பீர்கள். நிதி ரீதியாக, சிறப்பாக இருக்கும். அதே சமயம் செலவுகளும் இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 3 ஆவது வீட்டில் புதன் உதயமாகிறார். இதனால் இக்காலத்தில் பணிபுரிபவர்கள் தங்கள் செயல்திறனால் அலுவலகத்தில் நல்ல பாராட்டைப் பெறுவார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். வியாபாரிகள் முதலீடு செய்தால், அதனால் நல்ல லாபம் கிடைக்கும். இனிமேல் நல்ல பண வரவை காணக்கூடும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கன்னி
கன்னி ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் உதயமாகிறார். இதனால் இனிமேல் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கப் போகிறது. இந்த ராசிக்காரர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறப் போகிறது. நிதி நிலை வலுவாகும். வெளிநாட்டில் பணிபுரிவதற்கான வாய்ப்புக்கள் தேடி வரும். பணிபுரிபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் புதிய வேலை வாய்ப்புக்கள் தேடி வரும். பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் நல்ல லாபத்தைக் காணலாம்.
கும்பம்
கும்ப ராசியின் 6 ஆவது வீட்டில் புதன் உதயமாகிறார். இதனால் இனி இந்த ராசிக்காரர்களின் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். ஆயினும் குழந்தைகளைப் பற்றிய சில கவலை மனதில் இருக்கும். பிரச்சனையில் இரந்த பரம்பரை சொத்துக்களைப் பெற வாய்ப்பள்ளது. வியாபாரிகளுக்கு தொழிலில் சற்று ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், சமாளிக்கும் வகையில் இருக்கும். இக்காலத்தில் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications