Latest Updates
-
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
தினமும் வீட்டில் கற்பூரத்துடன் பிரியாணி இலை சேர்த்து எரிங்க.. அப்புறம் நடக்குறத பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க.. -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த நெல்லை ஸ்டைல் கொத்சை ட்ரை பண்ணுங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிகள் எல்லோரையும் அவங்க கட்டுப்பாட்டில் வைத்து ஆட்டி படைப்பவர்களாக இருப்பார்களாம் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பாரம்பரிய நெய் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
டாய்லெட் பேப்பரை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க -
இந்த பிரச்சனை இருந்தா, பூண்டு அதிகமா சாப்பிடாதீங்க.. - எச்சரிக்கும் டாக்டர்!
கடக ராசியில் உள்ள புதனால் ஜூலை 25 வரை இந்த 4 ராசிக்காரங்க நிறைய பிரச்சனைகளை சந்திப்பாங்க..
Mercury Rise In Cancer 2023: வேத ஜோதிடத்தில், புத்திசாலித்தனம், கல்வி, பேச்சு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் புதன். கிரகங்களின் இளவரன் என்று அழைக்கப்படும் புதன், குறுகிய காலத்தில் ராசியை மாற்றுவார்.
இந்த புதன் ரிஷப ராசியில் இருக்கும் போது அஸ்தமனமானார். அதன் பின் கடக ராசிக்குள் நுழைந்த சில நாட்கள் கழித்து புதன் உதயமானார். புதன் தனது நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

இதுவரை கடக ராசியில் அஸ்தமன நிலையில் இருந்த புதன் உதயமாகியிருப்பதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே தெரியும். முக்கியமாக புதன் உதயமாகியிருப்பதால், சில ராசிக்காரர்கள் நற்பலனைப் பெற்றாலும், சில ராசிக்காரர்கள் உடல் மற்றும் மன ரீதியான பிரச்சனைகளையும், தொழில் ரீதியான பிரச்சனைகளையும் சந்திப்பார்கள். இப்போது கடக ராசியில் உதயமாகியுள்ள புதனால் எந்த ராசிக்காரர்கள் பிரச்சனைகளை சந்திப்பார்கள் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் உதயமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பண இழப்பை சந்திக்க நேரிடும். நிறைய செலவுகளை சந்திக்கக்கூடும். பணிபரிபவர்கள் அலுவலகத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தொழிலில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாது. வேலைச்சுமை தான் அதிகரிக்கும். மேலும் காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது.
சிம்மம்
சிம்ம ராசியின் 12 ஆவது வீட்டில் புதன் உதயமாகியுள்ளார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை மோசமாக பாதிக்கப்படும். தேவையற்ற செலவுகளை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் எவ்வளவு கடினமாக உழைத்தாலும், முன்னேற்றமும், லாபமும் கிடைக்காது. சொல்லப்போனால் செலவுகள் தான் அதிகரிக்கும். ஈகோவால் வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் ஏற்படக்கூடும். ஆரோக்கிய விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் உதயமாகியுள்ளார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் கலவையான பலன்களையே பெறுவார்கள். அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்காது. வெற்றியை சுவைக்க முடியாது. பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் வேலைப்பளுவால் சிரமப்படுவார்கள். அதிக வேலை காரணமாக வேலையை மாற்றும் எண்ணம் எழலாம். ஆனால் அவசரப்பட வேண்டாம். நிதி நிலை மோசமாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 8 ஆவது வீட்டில் புதன் உதயமாகியுள்ளார். இதனால் இக்காலத்தில் பணம் தொடர்பான பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். வேலையைப் பொறுத்தவரை, இக்காலம் மிகவும் மோசமாக இருக்கும். சிலர் வேலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால, தங்கள் வேலையை மாற்ற நினைக்கலாம். ஆனால் இக்காலத்தில் இந்த மாதிரியான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல்நலத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications