Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
மேஷ ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 31 முதல் இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப கவனமா இருக்கணும்...
ஜோதிடத்தில் கிரகங்களின் நிலைகளைக் கொண்டு 12 ராசிகளின் பலன்களும் கணித்து கூறப்படுகின்றன. அந்த வகையில் நவகிரகங்களில் புத்திசாலித்தனம், வியாபாரம், பேச்சுஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் 2023 பிப்ரவரி இறுதியில் கும்ப ராசியில் இருக்கும் போது அஸ்தமனமானார். அதன் பின் அந்த அஸ்தமன நிலையிலேயே மீன ராசிக்கு மார்ச் 16 ஆம் தேதி நுழைந்தார்.
அஸ்தமன நிலையில் புதன் இருப்பதால், புதன் சற்று பலவீனமாக நற்பலன்களை அதிகம் வழங்காமல் இருந்தார். இந்நிலையில் 2023 மார்ச் 31 ஆம் தேதி புதன் மேஷ ராசிக்குள் நுழைந்ததும், அதே நாளில் மதியம் 02.44 மணிக்கு மேஷ ராசியில் உதயமாகவுள்ளார். இதனால் மார்ச் 31 ஆம் தேதி முதல் புதன் தனது பழைய ஆற்றலுடன் மேஷ ராசியில் இருப்பார்.

புதன் உதயமாவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். ஆனால் 4 ராசிக்காரர்கள் புதன் உதயமாவதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டில் புதன் உதயமாகிறார். இதனால் இக்காலத்தில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். படிப்பைக் கைவிடும் எண்ணம் எழும் அல்லது சூழ்நிலைகள் உருவாகலாம். சமூகத்தில் உங்களின் பெயர் பாழாகலாம் என்பதால் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. நிதி ரீதியாக பலவீனமாக இருக்கும். வேலை இழப்பிற்கான வாய்ப்புள்ளது. வணிகர்கள் நஷ்டத்தை சந்திக்க வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் உதயமாகவுள்ளார். இதனால் இக்காலத்தில் வேலையில் சிரமத்தை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் உங்களுடன் பணிபுரிபவர்கள் உங்கள் நற்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதிக வேலைப்பளு காரணமாக மன அழுத்தத்திற்கு உள்ளாவீர்கள். இருக்கும் வேலையை இழக்கும் வாய்ப்புக்கள் உண்டு என்பதால் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. தொழல் ரீதியாக சுமாராகவே இருக்கும். மொத்தத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
கன்னி
கன்னி ராசியின் 8 ஆவது வீட்டில் புதன் உதயமாகவுள்ளார். இதனால் இக்காலத்தில் நிதியை நிலையாக பராமரிக்க போராட வேண்டியிருக்கும். மருத்துவ செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. வேலையை மாற்ற தயாராக இருந்தால், இக்காலத்தில் புதிய வேலை வாய்ப்பைப் பெறுவீர்கள். ஆனால் வேலையை மாற்றிய பின்னர் வருத்தப்படுவீர்கள். ஏனெனில் உங்கள் உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு ஆதரவாக இல்லாமல் அழுத்தத்தைக் கொடுக்கலாம். பணிபுரிபவர்கள் நற்பெயரை இழக்க நேரிடும். இக்காலத்தில் நிதி விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். வணிகர்களுக்கு இக்காலம் மிகவும் சவாலானதாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 3 ஆவது வீட்டில் புதன் உதயமாகவுள்ளார். இதனால் இக்காலத்தில் இளைய உடன்பிறப்புகளுடன் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நிதி சிக்கல்களை சந்திக்கும் வாய்ப்புள்ளது. இக்காலத்தில் எந்த ஒரு முதலீடுகளையும் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. வணிகர்கள் ஒப்பந்தம் செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் மற்றவர்களால் ஏமாற்றப்படலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

