Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
மேஷத்தில் உதயமாகும் புதன்: இந்த ராசிக்காரர்களின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது...
Mercury Rise In Aries on March 2023: ஒருவரது ஜாதகத்தில் புதனின் நிலை மிகவும் முக்கியம். ஏனெனில் புதன் பேச்சு, வணிகம், புத்திசாலித்தனம் ஆகியவற்றின் காரணியாவார். இந்த புதன் கும்ப ராசியில் இருக்கும் போது அஸ்தமனமானார். இந்த அஸ்தமன நிலையிலேயே புதன் மீன ராசியில் பயணித்துள்ளார். இந்நிலையில் புதன் 2023 மார்ச் 31 ஆம் தேதி மேஷ ராசியில் உதயமாகியுள்ளார்.
கிரகங்கள் அஸ்தமன நிலையில் இருக்கும் போது வலுவிழந்து, அது வழங்கும் நன்மைகள் தடைபடும். மேஷ ராசியில் புதன் உதயமாகியுள்ளதால், அதன் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்படும். இப்போது மேஷ ராசியில் உதயமாகியுள்ள புதனால் 12 ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறவுள்ளார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
புதன் உதயமாவதால் மேஷ ராசிக்காரர்களின் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். ஆனால் அதிகப்படியான நம்பிக்கையைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது பிரச்சனையை சந்திக்க வைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்களுடன் வேலை செய்பவருடன் சண்டையில் ஈடுபட வாய்ப்புள்ளதால், கடுமையான பேச்சால் மற்றவர்களை காயப்படுத்திவிடாதீர்கள். ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
ரிஷபம்
புதன் உதயமாவதால் ரிஷப ராசிக்காரர்களின் நிதி நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். செலவுகள் அதிகரிக்கலாம். இக்காலத்தில் வியாபாரிகள் புதிய விஷயத்தை முயற்சிப்பதைத் தவிர்க்க வேண்டும். முதலீடுகள் எதையும் செய்துவிடாதீர்கள். ஆரோக்கியம் சுமாராக இருக்கும். உண்ணும் உணவுகளில் சற்று கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.
மிதுனம்
புதன் உதயமாவதால் மிதுன ராசிக்காரர்கள் நல்ல நிதி பலன்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் பதவி உயர்வு பற்றிய செய்திகளைப் பெற வாய்ப்புள்ளது. சம்பள உயர்வையும் பெறலாம். வியாபாரிகள் இக்காலத்தில் நல்ல லாபத்தைக் காண வாய்ப்புள்ளது. உடன்பிறந்தவர்களின் முழு ஆதரவு இனிமேல் கிடைக்கும்.
கடகம்
புதன் உதயமாவதால் கடக ராசிக்காரர்கள் தங்கள் துறையில் இனிமேல் நல்ல புகழைப் பெறுவார்கள். குடும்ப வாழ்வில் இனிமை அதிகரிக்கும். உறவுகள் வலுவாகும். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரிகள் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்களைப் பெறுவார்கள். இனிமேல் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
சிம்மம்
புதன் உதயமாவதால் சிம்ம ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கை அற்புதமாக இருக்கும். தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும். இனிமேல் உங்களின் நேரத்தை சிறப்பாக பயன்படுத்தி, தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். அதிர்ஷ்டம் ஆதரவாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். நிதி நிலை மேம்படும். வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும்.
கன்னி
புதன் உதயமாவதால் கன்னி ராசிக்காரர்கள் தங்கள் வாழ்வில் சில நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். குறிப்பாக தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இருப்பினும் சில சவால்களை சந்திக்க நேரிடும். இம்மாதிரியான சூழ்நிலையில் தைரியத்தை கைவிடாமல், புத்திசாலித்தனமாக செயல்பட்டால் நற்பலனைப் பெறலாம். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ள. இக்காலத்தில் உங்களின் கடனை அடைக்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.
துலாம்
புதன் உதயமாவதால் துலாம் ராசிக்காரர்களின் செலவுகள் திடீரென்று அதிகரிக்கும். தேவையில்லாத செலவுகளை அதிகம் செய்ய வேண்டியிருக்கும். ஆயினும், நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும் என்பதால் அச்சம் கொள்ள தேவையில்லை.
விருச்சிகம்
புதன் உதயமாவதால் விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் வாழ்வில் பல சவால்களை சந்திக்க நேரிடும். தொழிலில் பல ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க நேரிடும். நிதி ரீதியாக இக்காலம் சற்று மோசமாக இருக்கும். செலவுகளை இக்காலத்தில் கட்டுப்படுத்தாவிட்டால் பணப்பிரச்சனையை சந்திக்க நேரிடும்.
தனுசு
புதன் உதயமாவதால் தனுசு ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கும். மாணவர்கள் தேர்வில் சிறப்பாக செயல்படுவார்கள். காதலிப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். திருமணமானவர்கள் தங்கள் குழந்தைகளால் சில நற்செய்திகளைப் பெறலாம். அரசியலில் இருப்பவர்கள் சில நல்ல பதவியைப் பெற வாய்ப்புள்ளது.
மகரம்
புதன் உதயமாவதால் மகர ராசிக்காரர்கள் இனி வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். தொழில் ரீதியாக சாதகமாக இருக்கும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வைப் பெறலாம். நல்ல பண பலன்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆனால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க ஹோட்டல் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
கும்பம்
புதன் உதயமாவதால் கும்ப ராசிக்காரர்கள் தங்களின் நிதி நிலையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிகமாக செலவழிப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் மிகப்பெரிய நிதி பிரச்சனையை சந்திக்க நேரிடும். எனவே திட்டமிட்டு செலவழிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
மீனம்
புதன் உதயமாவதால் மீன ராசிக்காரர்கள் பரம்பரை சொத்துக்களால் நல்ல பலனைப் பெறுவார்கள். இக்காலத்தில் பணத்தை அதிகம் சேமிக்க முடியும். வியாபாரம் செய்பவர்கள், ஒரு பெரிய ஒப்பந்தத்தைப் பெறுவார்கள். இக்காலத்தில் பேச்சால் பலரை ஈர்ப்பீர்கள். அரசியலில் இருப்பவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications