Latest Updates
-
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்...
மேஷ ராசியில் உதயமாகும் புதனால் இன்று முதல் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் ஆரம்பிக்குது...
Mercury Rise In Aries: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் புத்தி, பேச்சு, கல்வி, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுவது புதன். இந்த புதன் சூரிய மண்டலத்திலேயே மிகச்சிறிய கிரகம். மேலும் குறுகிய காலத்தில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் மாறும்.
ஒருவரது ஜாதகத்தில் புதன் வலுவான நிலையில் இருந்தால் தான், அவர் அனைத்து வேலைகளிலும் வெற்றி காண முடியும். இந்த புதன் ஏற்கனவே மேஷ ராசியில் அஸ்தமன நிலையில், வலுவிழந்து உள்ளார். இதனால் இதுவரை புதனால் கிடைக்கவிருந்த பலன்கள் கிடைக்காமல் இருந்தது.

அதுவும் இந்த மேஷ ராசியில் ஏற்கனவே ராகு பயணித்து வருகிறார். ஆனால் மே 10 ஆம் தேதி மேஷ ராசியில் புதன் உதயமாகவுள்ளார். புதன் மேஷ ராசியில் உதயமாவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இப்போது புதன் உதயமாவதால் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டில் புதன் உதயமாகிறார். இதனால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதுவும் பண பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது. உடன் பிறந்தவர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைக்காது. இதனால் மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளாவீர்கள். பயணங்களால் மிகுந்த உடல் சோர்வை சந்திப்பீர்கள். லக்னத்தில் புதன் ராகுவுடன் சேர்ந்திருப்பதால் பேசும் போது வார்த்தைகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.
ரிஷபம்
ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டில் புதன் உதயமாகிறார். இதனால் தேவையில்லாத செலவுகள் அதிகரிக்கும். நண்பர்களால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வேலை காரணமாக வீட்டை விட்டு விலகி இருக்க வேண்டியிருக்கும். பணிபுரிபவர்களுக்கு இடமாற்றத்திற்கான வாய்ப்புக்கள் உள்ளன. ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். சரும பிரச்சனைகளை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் உதயமாகிறார். இதனால் வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் உதயமாகிறார். இதனால் பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சிறப்பாக செயல்படுவார்கள். பதவி உயர்வுகள் கிடைக்கும் வாய்ப்புள்ளன. வங்கி மற்றும் எழுத்து தொடர்பான வேலைகளில் இருப்பவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். தாயின் ஆரோக்கியம் மேம்படும். வீட்டில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புக்கள் உள்ளன.
சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் உதயமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. செலவுகள் அதிகரித்தாலும், வரவு அதிகமாக இருக்கும். தந்தையின் ஆதரவால் புதிய வேலைகளை தொடங்குவீர்கள். ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கு பணியிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கன்னி
கன்னி ராசியின் 8 ஆவது வீட்டில் புதன் உதயமாகிறார். இதனால் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நண்பர்களால் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அரசு வேலை செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். முதலீடு செய்ய நினைத்தால், கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. முக்கியமாக இக்காலத்தில் பணத்தை சேமிக்க முடியாமல் போகும்.
துலாம்
துலாம் ராசியின் 7 ஆவது வீட்டில் புதன் உதயமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் கலவையான பலன்களைப் பெறுவார்கள். புதிய வேலையைத் தொடங்க நினைத்தால், அதை இக்காலத்தில் செய்யாதீர்கள். சோம்பேறித்தனம் அதிகமாக இருக்கும். திருமண வாழ்க்கை டென்சன் நிறைந்ததாக இருக்கும். காதல் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இக்காலத்தில் பணம் தேடி வரும். அதே வேளையில் அதிக செலவுகளால் பண பிரச்சனையும் ஏற்பட வாய்ப்புள்ளது.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 6 ஆவது வீட்டில் புதன் உதயமாகிறார். இதனால் வேலையில் பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் சண்டைகள் வரலாம். அதிகரிக்கும் செலவால் கடன் வாங்கும் வாய்ப்புக்கள் உருவாகலாம். குழந்தைகளைப் பற்றிய கவலை அதிகரிக்கும். காதல் விஷயத்தில் நேர்மையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
தனுசு
தனுசு ராசியின் 5 ஆவது வீட்டில் புதன் உதயமாகிறார். இதனால் இக்காலத்தில் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களிடம் இருந்து மிகுந்த அன்பைப் பெறுவீர்கள். நீங்கள் காதலிப்பவரிடம் உங்கள் அன்பை வெளிப்படுத்துவீர்கள். மாணவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தடைபட்ட பல வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும்.
மகரம்
மகர ராசியின் 4 ஆவது வீட்டில் புதன் உதயமாகிறார். இதனால் பணியிடத்தில் சில மன அழுத்தத்தை சந்திப்பீர்கள். தாயாரின் ஆரோக்கியம் குறித்த கவலை சற்று அதிகரிக்கும். மேலும் ஒரு பெரிய பிரச்சனையில் சிக்கவும் வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு இக்காலம் நன்றாக இருந்தாலும், அரசு வேலை செய்பவர்கள் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்காமல் பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.
கும்பம்
கும்ப ராசியின் 3 ஆவது வீட்டில் புதன் உதயமாகிறார். இதனால் உங்களின் பகுத்தறியும் திறனும், பேச்சுத்திறனும் மேம்படும். எழுத்து தொடர்பான வேலையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் பேச்சால் பல வெற்றிகளைக் காண்பீர்கள். இக்காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும்.
மீனம்
மீன ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் உதயமாகிறார். இதனால் இக்காலத்தில் அவ்வளவு பெரிய நற்பலன்கள் கிடைக்காது. பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் உங்கள் பேச்சு பல பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். செய்யும் செலவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் மனதில் பட்டதையெல்லாம் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். இக்காலகட்டத்தில் யாரையும் நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











