Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
புதன் உதயமாவதால் மே 10 முதல் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும்...
Mercury Rise In Aries 2023: நவகிரகங்களில் கல்வி, வியாபாரம், புத்திசாலித்தனம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் புதன். ஒருவர் படிப்பில், வியாபாரத்தில் சிறப்பானவராக இருக்கிறார் என்றால், அவரது ஜாதகத்தில் புதன் நல்ல வலுவான நிலையில் உள்ளார் என்று அர்த்தம்.
நவகிரகங்களில் புதன் குறுகிய காலத்தில் ராசியை மாற்றுபவர். இந்த புதன் மார்ச் மாதம் மேஷ ராசியில் நுழைந்தார். மேஷ ராசியில் நுழைந்த பின் இவர் ஏப்ரல் 23 ஆம் தேதி அஸ்தமனமானார். கிரகங்கள் அஸ்தமன நிலையில் வலுவிழந்து இருக்கும்.

அதாவது இக்காலத்தில் கிரகங்களால் கிடைக்கவிருக்கும் நற்பலன்கள் தடைபடும். ஆனால் புதன் 2023 மே 10 ஆம் தேதி மேஷ ராசியில் உதயமாகவுள்ளார். இதனால் பல ராசிக்காரர்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கப் போகின்றன. அதே வேளையில் சில ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். இப்போது புதன் மேஷ ராசியில் உதயமாவதால் எந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டில் புதன் உதயமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அவ்வளவு நன்றாக இருக்காது. சிறு வேலையை முடிக்கவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தேவையற்ற செலவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். இதனால் சேமிக்க முடியாமல் போகும். குடும்பத்தினருடன் தேவையில்லாத வாக்குவாதம் ஈடுபட வாய்ப்புள்ளது.
ரிஷபம்
ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டில் புதன் உதயமாகிறார். இதனால் குடும்பத்தில் நிறைய சண்டைகள் ஏற்படும். பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும். ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்பட வேண்டியிருக்கும். காதல் வாழ்க்கை மற்றும் திருமண வாழ்க்கையில் வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் அல்லது சண்டைகள் ஏற்படலாம்.
கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் உதயமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் இனி நிறைய பிரச்சனைகளை சந்திப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் பல வழிகளில் பிரச்சனைகள் வரக்கூடும். வியாபாரத்தில் லாபம் கிடைக்காமல் கவலைப்படுவீர்கள். வியாபாரத்தில் பெரிய முதலீடு செய்தால், அது கையை மீறிப் போகும். திருமண வாழ்க்கையைப் பொறுத்தவரை, வாழ்க்கைத் துணையுடன் ஏதாவது ஒரு விஷயத்திற்காக சண்டை வர வாய்ப்புள்ளது. பிரச்சனைகளைத் தவிர்க்க, இக்காலத்தில் உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
