Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
புதன் வக்ரமாவதால் டிசம்பர் 13 முதல் இந்த ராசிக்காரங்க பண விஷயத்தில் உஷாரா இருக்கணும்...
Mercury Retrograde In Sagittarius On December 2023: நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். கிரகங்களிலேயே புதன் குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர். இவர் மிதுனம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார்.
இந்த புதன் தற்போது தனுசு ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் டிசம்பர் 13 ஆம் தேதி புதன் தனுசு ராசியில் வக்ர நிலையில் மாறி பின்னோக்கி பயணிக்கவுள்ளார். புதன் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளதால், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றில் நன்கு தெரியும்.

அதில் சில ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெற்றாலும், சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சிலர் தொழிலில் நஷ்டத்தை சந்திக்கலாம். பேச்சால் பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம். இப்போது தனுசு ராசியில் வக்ரமாகும் புதனால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் 6 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம். தன்னம்பிக்கை மறறும் தைரியம் குறைவாக இருக்கும். இதனால் செய்யும் வேலை கூட கெட்டுப் போகும்.
உடன் பிறந்தவர்களுடன் தவறான புரிதலால் உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பேசும் போது கவனமாக இருங்கள். சட்ட விஷயங்களில் இருந்து விலகி இருக்க முயற்சி செய்யுங்கள். இல்லாவிட்டால் தேவையற்ற பண செலவுகளை சந்திக்க நேரிடும். பயணங்களின் போது கவனமாக இருக்க வேண்டும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
மேஷம்
மேஷ ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கலாம். பேசும் போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், உங்கள் பேச்சை மற்றவர்கள் தவறாக புரிந்து, அதன் காரணமாகவே பெரிய சண்டைகளை சந்திக்க நேரிடும்.
உடன் பிறந்தவர்களுடன் வாக்குவாதம் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிலர் பழைய நோய்களால் மீண்டும் அவதிப்படலாம். நீண்ட தூர பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த பயணத்தின் போது சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 8 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் வரலாம். உறவினர்களுடன் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. பேச்சில் கவனத்தை செலுத்த வேண்டும்.
இல்லாவிட்டால் உங்கள் பேச்சே பல பிரச்சனைகளை இழுத்துவிடும். அதிக செலவுகளால் கஷ்டப்படுவீர்கள். சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம். தந்தையின் ஆரோக்கியம் குறித்த கவலை அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











